பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் கோரிக்கையே - விக்டோரியா பேரரசை போற்றிப் புகழ்ந்து அது நிலை பெற வேண்டும் என பிராத்தித்தது. இப்படி அவர்கள் பிராத்திக்கு மளவிற்கு சென்றதற்கு சுதேசி நலன் ஒன்றும் காரணமில்லை, அவர்களது சுயநலன் தவிர வேறில்லை.

எனவே, காங்கிரஸ் தொடங்கப்பட்ட ஆண்டிலிருந்து ஒன்று தெளி வாகிவிட்டது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவது எளிதல்ல என்றும், அதனை அண்டி அனுகூலங்களை பெற் றுக் கொள்வதே நல்லது என்பதை உணர்ந்து கொண்டன. அதற்கு ஏற்றாற் போல் பிரிட்டிஷ் அரசும் இந்தியர்களுக்குச் சலுகைகளை அளித்து வந்தது. அந்த சலுகைகளையும், பதவிகளையும் பெறுவதற்கு கல்வி கற்ற பார்ப்பன, வியாபார, வேளாண் உயர்குடிகளிடையே கடுமையான போட்டி நிலவி யதில், ஒடுக்கப்பட்ட மக்கள் கேட்பாரற்று இருந்தனர். ஆனாலும் அதன் தலைவர்கள் தங்களால் இயன்ற முயற்சிகளைச் செய்தார்கள்.

இந்த நிலையில் கவர்னர் ஜெனரலாகவும், வைஸ்யராகவும் இருந்த டஃப்ரின் பிரபு நாட்டில் சீர்திருத்தங்களை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தியர்களுக்கு மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவம் கொடுப்பதைப் பற்றி ஆய்வு செய்ய 1888ல் அட்சிசன் பிரபு தலைமையில் ஒரு குழுவை நியமித்தார். இக்குழுயார் யாருடைய நலனை (interest) கவனத் தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அக்குழுவிற்கு குறிப்பிட்டு சொல்லப்பட்டது. அவை;-

அ) நாட்டில் நிலையான தாக்கத்தை கொண்டுள்ள பாரம்பரிய பேர்பெற்ற குடியமர்ந்த வகுப்பினர் நலன்.

ஆ) வியாபாரம், தொழில் முனைவோர், மற்றும் வேளாண் வகுப்பினர் நலன்.

இ) வணிகம் ஐரோப்பிய மற்றும் தோட்டத் தொழில் சார்ந்த நலன்.

ஈ) நிலையான மற்றும் சிறப்பான நிர்வாகிகள்.

ஆகியோரின் நலன்களை பாதுகாப்பது, அவர்களுக்கான அரசியல் முக்கியத்துவத்தையும், பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யவேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. (1964:128)

அந்த கமிட்டியில் சர், சார்லஸ் அட்சிசன் அவர்களுடன் ஜெ. வெஸ்ட்லேண்ட் சர். அந்தோனி மெக்டோனால்ட் ஆகியோர் இருந்தனர். இந்த குழுவினர் நிலைமைகளை ஆராய்ந்து 1888ம் ஆண்டு அக்டோபர் 10ம் நாள் தம்முடைய அறிக்கையை அரசுக்கு சமர்பித்தனர்.

கௌதம சன்னா / 14