பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்த 6 கோரிக்கை அடங்கிய 10 கோரிக்கைகளை காங்கிரஸ் செயலாளரான ஸ்ரீ வீரராகவச்சாரியாருக்கு பண்டிதர் அனுப்பினார். மனுவை பெற்றுக் கொண்ட ராகவாச்சாரியார் காங்கிரஸ் கூட்டத்தில் வைத்து பதில் சொல்வதாக பண்டிதருக்கு பதில் எழுதினார்.

எனினும், காங்கிரஸ் தாமதம் செய்தது. இந்நிலையில் சென்னை மகாஜன சபையின் மாநாடு சென்னையில் கூடுவதாகவும், அதில் கோரிக்கை உள்ளவர்கள் தம் கோரிக்கைகளை முன் வைக்கலாம் என அனைத்து மாவட்டங்களுக்கும் செய்தி அனுப்பியது. அந்த விளம்பரத்தை கண்ட பண்டிதர் சாதி பேதமற்ற திராவிட மகாஜன சங்கத்தை கூட்டி ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மகா ஜன சபை கூடுகைக்கு பண்டிதரை பிரதிநிதியாக அனுப்புவதென முடிவானது. அதன்படி அவர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

1892 ஏப்ரல் மாதம் கூடிய அந்த கூடுகை சென்னை விக்டோரியா டவுன் ஹாலில் (சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் ரிப்பன் கட்டிடத்திற்கும் இடையிலுள்ள உயரமான கோபுரமுள்ள சிவப்பு கட்டிடம், அதன் முதல் தளத்தில் ) கூடுகை நடைபெற்றது. கூடுகைக்கு சபையின் தலைவர் பி அரங்கைய நாயுடு தலைமை தாங்கினார். கூட்டத் தில் பல்வேறு தரப்பினர்களின் பிரச்சினைகள் அலசப்பட்டாலும் தாழ்த்தப்பட்டோரின் பிரச்சினைகள் விவாதிக்கப்படத் தேவையில்லை என தலைவர் அறிவித்தார். எனினும் மகாஜன சபையின் முக்கிய பிரமுகரும், பண்டிதரிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றவருமான காங்கிரஸ் செயலர் வீரராகவாச்சாரியார் எழுந்து நீலகிரியிருந்து கோரிக்கையோடு பண்டிதர் வந்திருப்பதை அறிவித்தார். எனவே பிரதிநிதியாக வந்தவரை தட்டிக் கழிக்க முடியாமல் பண்டிதர் தம் கோரிக்கைகளை விளக்க அழைக்கப் பட்டார், பண்டிதர் எழுந்து

"உங்களாலே இம்மக்கள் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து கிடக் கிறார்கள், எனவே நீங்கள் தான் சீர்தூக்கி விட வேண்டும்" என்றார்.

அதற்கு சபாநாயகர் "இது உள் சீர்திருத்த சங்கமாதலின் உங்களுக்கு என்ன வேண்டும் " எனக் கேட்டார். அதற்கு பண்டிதர்.

ஐயா  : உலகத்திலுள்ள சகல சாதியோருக்கும் பொது கோயில் என்றும் பொது தெய்வமென்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அங்கனமிருக்க இக்குலத்தோரிலுள்ள வைணவ மதத்தோர்களை விஷ்ணுவின் கோயில்களுக்குள்ளும், சைவ

17 / பண்டிதரின் .... சமூகநீதிக் கொள்கை