பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதத்தோரை சிவன் கோவில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கப்படாது. அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்க்கை சுகமடையமாட்டார்களா? மதங்களும் பிரபலமடை யாதா? என்றார்.

உடனே சபையார் எல்லோரும் ஏகமாய் எழுந்து நின்று "அப்படியே கோயிலுக்குள் சேர்க்கப்படாது என்று கூச்சலிட்டனர். இதில் வந்திருந்த தஞ்சாவூர் பிரதிநிதி பூரீ சிவராம சாஸ்த்திரியவர்கள் எழுந்து ;

உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோருக்கு உரியதல்ல என ஆட்சேபித்தார்.

ஆட்சேபனையை பார்த்துக் கொண்டிருந்த பண்டிதர் அவரை நோக்கி ;

ஐயா, அங்ஙணமிருக்குமாயின் உங்கள் சாமிகள் எமக்கு வேண்டாம், அதை விடுத்து இக்குலத்து பிள்ளைகள் படிப்பதற்கு கிராமந்தோறும் கல்வி சாலைகள் வைத்து நான்காம் வகுப்பு வரை இலவசமான கல்வி கற்பிக்க வேண்டும்.

இக்குலத்து கிராமவாசிகளுக்கு அங்கங்கு வெறுமனேயுள்ள பூமிகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டும். என்று கருணை தாங்கிய ராஜாங்கத்தோருக்கு உதவிகூறு. (Recommandation) பத்திரமாவது கொடுக்க வேண்டும் என்று கோரினார்.

பண்டிதரின் கோரிக்கையை ஆதரித்து எல்லூரிலிருந்து வந்திருந்த பிரதிநிதி ஸ்ரீ சங்கரன் என்பவர் விரிவாக பேசினார். நாட்டின் முதுகெலும்பு போல் உள்ள இம்மக்களை கைதூக்கி விட வேண்டும் என கோரினார்.

இவரை ஆதரித்து ஸ்ரீ ராஜா சர்வலை இராமசுவாமி முதலியார் பேசி அரசுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கேட்க வேண்டும் என கூறினார். எனவே இவரும் பண்டிதரை ஆதரித்து பேசியதால் ஆதரவு கருத்துக்கள் பலமாக எழவே சபையோர் மறுப்பேதும் சொல்லவில்லை.

இதற்கு மூன்றாம் நாள், பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, மீண்டும் பண்டிதர் முன்வைத்த கல்வி - நிலம் கோரிக்கைகள் மீது சபையோர் கருத்து கேட்க அவர்கள் மூவர் கருத்தையும் ஏற்றுக் கொண்டார்கள், பின்பு அது கோரிக்கையாக அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதின் பேரில் தென்னிந்தியாவெங்கும் கலாசாலைகள்

கௌதம சன்னா / 18