பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடனே அரசின் கவனத்திற்கு போவதற்கான வாய்ப்பு இருந்தது. அதே வேளையில், படித்த மற்றும் சொத்துள்ள உயர்சாதி வர்க்கத்தின் நலனை இந்திய நகரங்களில் குறிப்பாக கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங் களில் காங்கிரஸ் பிரதிபலித்ததைப் போல சென்னையில் கூடுதலாக சென்னை மகாஜனசபை பிரதிபலித்தது. ஏற்கெனவே பிரிட்டிஷ் அரசின் புறக்க னிப்பினால் ஒரு கவனத்தை கவரக்கூடியதாக இல்லாமல் போன தாழ்த்தப் பட்டோர்கள் கல்வியில் குன்றியும், சொத்துடைமையில் பின்தங்கியும் கரண்டலுக்குள்ளாகி இருந்ததால் அரசின் கவனம் இவர்கள் மேல் திரும்பாததில் வியப்பேதுமில்லை.

இந்த சூழலை நன்கு புரிந்திருந்த பண்டிதர் காங்கிரசுக்கும். சென்னை மகாஜனசபைக்கும் தம் கோரிக்கைகளை முன்வைப்பதின் மூலம் தம் கோரிக்கைகளுக்கு உடனே அரசு செவிசாய்க்கும் என நம்பி னார். ஏனெனில் தமது கோரிக்கைகளை படித்த பணம் பெருத்த சாதி களின் கோரிக்கைகளாக மாற்றுவதின் மூலம் அக்கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொள்ள முடியுமென எதிர்பார்த்தார். இதில் அவர் ஒரளவு வெற்றியும் பெற்றார், எனவே பண்டிதரின் அரசியல் கணக்கு தெளிவா கவே இருந்தது.

இனி, இரண்டாவது கேள்விக்கு வருவோம். காங்கிரசுக்கு அனுப் பிய கோரிக்கை மனுவை திரும்ப படித்துப் பார்த்தால் கீழ்கண்ட விஷ யங்கள் தெளிவாகிறது.

கோரிக்கை 2ன்படி : "பிரத்யேகமான கல்விச் சாலைகளை இக் குலத்தாருக்கு அளிக்க வேண்டும். இதை இன்றைய நிலையோடு ஒப்பிட் டால் தமிழகச் சூழலில் ஆதி திராவிட நலப்பள்ளிகள் என்பதும், மற்ற இடங்களில் பட்டியல் சாதியினர் பள்ளிகள் என்பதும் விளங்கும். எனவே பண்டிதரின் கோரிக்கையின் தொடர்ச்சிதான் இன்றைய பள்ளிகள்.

கோரிக்கை 3ன் படி : இக்குலத்து பிள்ளைகளின் மேற்படிப்புக்கு ஸ்காலர்ஷிப் தொகை

கோரிக்கை 4ன் படி : அரசு அலுவலகங்களில் இக்குலத்தோருக்கு பணி நியமனம் - அதாவது தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

கோரிக்கை 5ன் படி : தாழ்த்தப்பட்டோரின் கல்விக்குத் தக்க உத்யோகம், அதாவது பரம்பரை சாதித் தொழிலை விடுத்து தகுதி அடிப் படையில் பணி நியமனம் -

கோரிக்கை 6ன் படி : முனிசிபல், கிராம சங்கங்களில் இக்குலத்தார்

கௌதம சன்னா / 20