பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என பலர் சமூகத்தவர்களின் பிரதிநிதித்துவம் இருந்தது. இதில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் விலகி விட்டால் அந்த சங்கம் பிராமணர்கள் சங்கமாகவே எஞ்சிவிடும். எனவே தன்னுடைய இட ஒதுக் கீட்டு திட்டத்தை பண்டிதர் முன்வைத்தார்.

அதில்,

ஐயா,

தங்களுடைய கூட்டத்தார் விஷயமாக அந்தரங்கத்தில் பெருந்தொகையார் ஆலோசனையும், பகிரங்கத்தில் சிறுந் தொகையார் ஆட்சேபனையும் இருக்கிறது.

1. ஆட்சேபணை;

இக்கூட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் பெருந்தொகை பிராமணர் களாய் இருப்பதினாலேயாம்.

இக்கூட்டம் எப்போது நாஷனாலாக ஏற்பட்டதோ அதன் அங்கங்களும் அப்படியாகவே இருத்தல் வேண்டும்.

அதாவது, பிரசிடெண்டுகளில்

பிராமணர் 1 நபர்
யுரேஷியர் 1 நபர்
மகமதியர் 1 நபர்

இருந்து காரியங்களை சமயம்போல் நடத்தி வரவேண்டியது. செக்ரட்டரிகளிலும், டிரஷரர்களிலும் (Secretary, Treasures)

பிராமணர் 1 நபர்
நான் பிராமின் 1 நபர்
மகமதியர் 1 நபர்

ஆக மூன்றுபேர் பொக்கிஷம் வைக்கவும், வாங்கவும் இருத்தல் வேண்டியது.

33 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை