பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள்

(சாதி பேதமில்லா திராவிடர்கள்)

100 பேர் 20%
சாதிபேதமுள்ள இந்துக்கள் 100 பேர் 20%
மகமதியர் 100 பேர் 20%
யுரேஷியர் 100 பேர் 20%
இந்திய கிறித்தவர் 100 பேர் 20%
மொத்தம் 500 பேர் 100%

இப்படி நியமிக்கப்படுபவர்கள் எப்படி தெரிந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையும் பண்டிதர் தெளிவுபடுத்தினார். அதன்படி,

அந்தந்த வகுப்பார் நூறு பேரு தங்களுக்குள் உள்ள விவேகிகளைத் தெரிந்தெடுத்து ஆலோசனைகளை சங்கத்திற்கும் அனுப்புவார்கள் அதனால்,

இந்துக்கள் சம்பந்த நியமனத்திற்கு மகமதியர் பிரவேசிக்க மாட்டார்கள்.

மகமதியர் சம்பந்த நியமனத்திற்கு இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

சாதிபேதமில்லா பூர்வ பெளத்தர்கள் நியமன சம்மதத்தில் சாதி பேதமுள்ள இந்துக்கள் பிரவேசிக்க மாட்டார்கள்.

எனவே காரியாதிகள் அந்தந்த வகுப்பார் பிரியசித்தம் போல் நிறைவேறிவரும் சகல ஏழை குடிகளும் இடுக்கமில்லா சுக வாழ்க்கைகளை அடைவார்கள். (1:107)

பண்டிதரின் இந்த கருத்துக்கள் வெளிவந்து அதன் மீதான கருத்துகளும் சமூகத்தில் விவாதிக்கப்பட்டது. இருந்தபோதும், மார்லி தன்னுடைய திட்டத்தில் உறுதியாக இருந்தார். அவரது திட்டங்கள் பலத்த எதிர்ப்புக்குள்ளாகிய நிலையில் இந்திய கவுன்சில் மசோதாவை 1909 ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாள் பிரபுக்கள் அவையில் முன் வைத்தார் மார்லி. தொடர்ந்து அதன் மீதான இரண்டாம் கட்ட விவாதத்திற்காக பிப்ரவரி 23ம் நாள் வைத்தார். தொடர்ந்து அந்த மசோதா பிப்ரவரி 24ம் நாள் நாடாளுமன்ற குழு விவாதத்திற்கு அனுப்பி அங்கும் மார்ச் 4, 9 ஆகிய நாட்களில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் மார்லி

கௌதம சன்னா / 44