பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலை நியமிக்குஞ் சட்டத்தை ஆலோசித்தபடியால் இந்தியர்களின் குணாகுணங்களை அறிந்தோர்களும் பார்லிமெண்ட் மெம்பர்களும் ஆகிய கனவான்கள் தற்கால பார்லிமெண்டில் லார்ட் மார்லியவர்களின் ஆலோசனைகளுக்கு மறுப்பு கூறும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். (1:106)

மேலும், மார்லியின் திட்டத்தை காங்கிரஸ் ஆதரித்து வந்தது. ஏனெனில் இந்துக்களின் தயவில் முஸ்லீம்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்ததை அது புரிந்து கொண்டு அது அதை ஆதரித்தது. ஆனால் காட்சி கள் வேகவேகமாக மாறத் தொடங்கின.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கீழவையிலும் (House of Common) மசோதா பலத்த எதிர்பிற்குள்ளாகி அம் மசோதாவின் அடிப்படையே திருத்தப்பட்டது. மார்லியின் திட்டம் தேர்தல் முறையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு, விவாதத்தில் இருந்தது. இந்த இடைபட்ட காலத்தில் பண்டிதர் தன்னுடைய முயற்சிகளை கைவிடவில்லை. தமிழனில் தொடர்ந்து எழுதுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியும் இந்துக்களின் அதிகார மோகத்தை தாக்கியும் வந்தார். இந்துக்களுக்கு உயர் அதிகாரப் பதவிகளைக் கொடுப்பது சமூகத்திற்கு ஆபத்தானது என்றும் அவர் கருதினார்.

"மார்லி கருத்துப்படி நிர்வாகக் குழுவில் இந்தியரை சேர்க்கும் திட்டம் பற்றி ஒரு முப்பது அல்லது முன்னுறு பேருக்குத் தான் தெரியும் மீதமுள்ள முப்பது கோடி பேருக்கு அதன் பொருளே விளங்காது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீ என்ன சாதி? அவனென்ன சாதி? நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி என்பவைகள் தான் அவர்களுக்கு தெரியும். அதுவும் கற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் பிராமணர்களுக்கு அந்த பதவியை கொடுக்கலாம் என இடைநிலை சாதிகள் சொல்லுவதை சாதி பேதமற்ற திராவிடர்களும், சுதேச கிறித்துவர்களும், மகமதியர்களும், யுரேஷியர்களும் சிற்றரசர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அந்த பதவியில் அமரும் பிராமணரால் சாதி நிலைப்பதுமின்றி அவனது சாதியே அவனது ஆச்சாரமே வாழும்"

என்று தன்னுடைய கடுமையான எதிர்ப்பைபண்டிதர் கூறிவந்தார்.(1:109)

பண்டிதரின் எதிர்ப்பிற்கு இந்த அம்சம் மட்டுமே காரணமில்லை அதை விடவும் முக்கியமான மக்கள் தொகை அடிப்படையிலான அரசி யல் பிரச்சினை காரணமாய் இருந்தது. ஏனெனில் சாதி இந்துக்கள் இந்துக்

கௌதம சன்னா / 46