பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தலித்துகளையும் சேர்த்து தமது பிரதிநிதித்துவ எண்ணிக்கை அதிகரிக்க விழையும் மோசடியினால் கொதிப்படைந்தார்.

"இந்துக்களோ இத்தேசத்தில் முக்கால் பாகம் இருக்கிறோமென்றும் சகலரையும் பொதுவாக இந்துக்களென்றே கொள்ள வேண்டியதென்றும் சம்யுக்த வார்த்தையாடி வருகிறார்கள்" (1:111)

"சாதிபேதமுள்ள இந்துக்களென்னும் பிராமண மதஸ்தர்களுக்கும் சாதிபேதமற்ற திராவிடர்களாம் பெளத்த மதஸ்தர்களுக்கும் யாதொரு சம்பந்தம் கிடையாது (1:111)

என்று தம்முடைய எதிர்ப்பை கூறியதுடன் தென்னகத்தில் அறுபது லட்சம் சாதிபேதமற்ற திராவிடர்களும் இந்தியா முழுக்க ஆறு கோடி பேராக இருப்பதுடன் மக்கள் தொகையில் ஐந்து பாகத்தில் ஒரு பாகமாக சாதிபேதமற்ற திராவிடர்களாம் பூர்வ பெளத்தர்கள் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு பிரத்தியோகமான நியமனம் (Separate Representation) இருக்க வேண்டும் (1:111) என்று தன்னுடைய ஆலோசனையை சொன்னார்.

மார்லியின் சீர்திருத்த நடவடிக்கையின் போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் கோரும் இந்த கோரிக்கை முதன் முறையாக வெளிப்பட்டதுடன், அதை தொடர்ந்து வளப்படுத்தும் விதமாகவும் எழுதி வந்தார்.

மேலும் இந்துக்களின் ஒற்றை அடையாள மோசடியை அம்பலப் படுத்துவதோடு நில்லாமல், அதுவரை தான் முன் வைத்த சாதிபேதமற்ற திராவிடர்கள், இந்துக்கள், இந்திய கிறித்துவர், யுரேஷியர், மகமதியர், என்ற பிரிவுகளுக்கு மட்டுமின்றி பாரசீகர் (பார்சி) சீக்கியர் ஆகியோ ருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இராஜாங்க உத்யோக சாலை களில் இவ்வகுப்பாருக்கு அவர்களின் தொகைக்கு தக்கவாறு இடம் ஒதுக்குவதுடன், அரசின் அந்தஸ்தான உத்யோகங்களை சாதிபேதம், சமய பேதம் அற்றவர்களுக்கே கொடுக்க வேண்டும். (1:112) என்று கோரினார்.

பண்டிதரின் கருத்துபடி அனைத்து மதத்தவருக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என முன்வைப்பு அதுவரை இருந்து வந்த முன்வைப்புகளிலிருந்து புதியதொரு அடியை எடுத்து வைத்தது. இந்த நேர்மையான முன்வைப்புகளுக்கு பிறரிடமிருந்து என்னவிதமான எதிர் வினைகள் என்பது குறித்து போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. எனி

47 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை