பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் மற்றும் தனி தொகுதி முறை (Seperate Representation and Seperate Electorate) வழங்கப்படும்.

இந்த அம்சங்களை உள்ளடக்கிய மசோதாநிறைவேறி சட்டமாக்கப்பட்ட பிறகு விதிகள் வகுக்கப்படவும், அது அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய இடைப்பட்ட கால அவகாசம் இருந்தது. எனினும் இந்த தகவல் இந்தியாவிற்கு வந்து சேர்வதற்கு வழக்கமான கால அவகாசம்தான் பிடித்தது.

தகவல் முழுதும் வந்து சேர்ந்தவுடன் பழைய காட்சிகள் மறைந்து தலைகீழான காட்சிகள் தோன்றின. முதலில் மார்லியின் தொடக்க திட்டத்தை காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து அமைப்புகளும் எதிர்த்தன. ஆனால் இந்த முறை முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளைத் தவிர மற்ற அனைவரும் எதிர்த்தார்கள். முஸ்லிம் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் தனது முயற்சியில் வெற்றிபெற்றனர். ஆனால் காங்கிரஸ் தோற்றதாக பொருளில்லை. ஏனெனில் பொதுப் போட்டிகளில் உயர்சாதி வர்க்கம்தான் நிரம்பி இருந்தது. இந்த பொது அதிகார பிரிவினையில் முஸ்லீம்கள் கொஞ்சம் பங்கு போட்டுக் கொண்டது உயர்சாதியினருக்குப் பிடிக்கவில்லை. எனவே எதிர்ப்புகள் கடுமையாக வெளிப்பட்டன.

இந்நிலையில் தலித் மக்களின் முன்னோடித் தலைவரான பண்டிதர் நடைமுறை பொருத்தத்தோடு இப்பிரச்சினையை அணுகினார். முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டதை வரவேற்றார். அத்துடன் நில்லாமல் காங்கிரசாரின் மாய்மாலங்களுக்கு மயங்காமல் தம்முடைய உரிமையை விட்டுவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று முஸ்லீம்களுக்கு ஆலோசனையும் சொன்னார்.

மார்லியவர்களின் நடவடிக்கைகள் யாவும் இந்தியாவிலிருந்து மிண்டோ அவர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைகளாலும், லண்டனில் அவரை சந்தித்த காங்கிரஸ் பிரமுகர்களான சுரேந்திர நாத் பானர்ஜி, கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்ட காங்கிரசின் தலைவர்கள் மற்றும் இசுலாமிய தலைவர்கள் ஆகியோரினால் சித்தரிக்கப்பட்ட சித்திரத்தாலேதான் பெரும்பாலும் உருவானது. அவர் இந்தியாவிற்கு வந்து எந்த நேரடி சாட்சியமும், விசாரணையும் செய்யாமல் தனது திட்டத்தை முன்வைத்து, அது பல மாற்றங்களுக்கிடையில் சட்டமாக்கப் பட்டது. மார்லியின் இந்த நடவடிக்கையின் மூலம் முஸ்லீம்களுக்கு தனி பிரதிநிதித்துவம் கிடைத்தது போலவே, அரசு உயர் பதவிகளில் இந்தியர்

49 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை