பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களை நியமிக்கும் முடிவை அவர் எடுத்திருந்தார். இந்த தகவல் பண்டித ருக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டாக்கியதால் தனது எதிர்ப்பை காட்டி னார். 1909 ஜூன் 30ம் நாள் தமிழனில் .

இத்யாதி வித்யாசங்களையும் இந்துக்களின் குணா குணங் களையும் நன்காராய்ந்து அறியாத லார்ட் மார்லியவர்கள் இந்துக்களுக்கு பெருத்த உத்யோகங்களை அளிக்கலாமென்றாலோசிப்பது உள்ள ஏழை குடிகள் ஒருவரையுந் தலையெடுக்க விடாமல் நசித்துவிட்டு சாதித் தலைவர்களை மட்டும் சுகமடையச் செய்வதற்கேயாம். ஆதலின் நமது பிரிட்டிஷ் ஆட்சியின் ஆலோச னையதிபர்கள் இந்திய குடிகளை இடுக்கத்திற்கு ஆளாக்காமல் காக்க வேண்டியதவர்கள் கடனாகும் (1:158)

"இத்தகைய உத்தேசம் அவர் இந்தியாவை வந்து பாராததிரையும், இந்துக்களுடன் பழகாத குறையுமேயாம்

கண்டும் பழகியும் இருப்பாராயின் அப்பா! அப்பா!! இந்துக்களுக்கும் அந்தஸ்தான உத்யோகங்களுங் கொடுக்கப்போமோ வென்று குப்புறப் படுத்துக் கொள்ளுவார். காணாதவரும், பழகா தவரும் ஆதலின் அவர் கருத்துக்கள் யாவும் விருத்தமாக விளங்குகிறது.

ஒரு ஆபிஸில் பெரிய உத்யோகஸ்தர் ஒரு ஐயங்கார் சேர்வாராயின் ஐந்து வருஷத்துள் அவ்வாபிசிலுள்ள முதலி, செட்டி, நாயுடு மற்றுமுள்ளவர்கள் எல்லாம் மறைந்து போய் எல்லாம் ஐயங்காரர்கள் மயமாகவே தோன்றுவதியல்பாம்.

அங்ஙனமிருக்க நமது கனம் தங்கிய லார்ட் மார்லியவர்கள் இந்தியாவிற்கு வந்து தேச நிலைகளையும், கிராம நிலைகளையும் கண்டவருமன்று, பெரியசாதி சின்னசாதி எனும் குடிகளுடன் பழகியவருமன்று.

மார்லியவர்கள் ஏற்பாடு எந்தவிதத்திலும் இந்துக்களைத் திருப்தி செய்யவில்லை சட்டசபைகளில் 75% இடம் கிடைக்குமென நம்பியிருந்தவர்களுக்கு அரசு பணிகள் மட்டுமே கிடைப்பது அவ்வளவு உவப்பானதாக இல்லை. எனவே காங்கிரஸ் பெருந்தலைவர்கள் சுய ராஜ்ஜிய கோரிக்கையை உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஏற்கெனவே 1907ம் ஆண்டு சூரத்தில் நடந்த காங்கிரசில் மிதவாதிகளுக்கும் - அமித வாதிகளுக்கும் கலகமுண்டாகி காங்கிரஸ் இரண்டு பிரிவாக பிரிந்து

கௌதம சன்னா / 50