பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வருவது இக்குடிகளின் அநுபவமாயிருக்கிறது.

இத்தகையாய் முனிசிபல் கமிஷனர் நியமனங்களே இன்ன வையாயது, யாதென்று அறியாதப் பெருந்தொகைக் குடிகளுக்கு சட்ட நிருபண சங்க நியமனம் யாது விளங்கி அங்கங்களை நியமிக் கப்போகின்றார்கள். குடிகளே நியமிப்பார்களென்பது வீண் முயற்சியேயாகும்.

சட்ட நிரூபண சபைக்கு குடிகளே அங்கங்களை நியமிப்பதைப் பார்க்கிலும் கருணைத் தங்கிய கவர்ன்மெண்டாரே ஒவ்வோர் அங்கங்களையுந் தெரிந்தெடுத்து சங்கத்திற்கு சேர்த்து விடுவது அழகாகும். (1:179)

பண்டிதரின் இந்த யோசனைக்கு அவர் கண்ணாரக் கண்டு வந்த முனிசிபாலிட்டி தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகள் மட்டும் காரணமில்லை. பணம் படைத்த உயர்சாதியினர் அந்த பதவிகளில் உட்கார்ந்து கொள்வதில் மூலம் சகல மக்களின் குரலை ஒலிக்க விடாமல் இருப்பதுதான். எனவே அந்தந்த சமூகங்களில் உள்ள படித்த கனவான் களை நியமிப்பதனால் அச்சமூகத்தின் கஷ்டத்தை உணர்ந்த அவர்கள் மூலம் மக்கள் குரல் சபையேறும் என கருதியதால்தான் இந்த திட்டத்தை முன்வைக்கிறார். எனினும் இந்த கருத்தில் பின்னாளில் அவருக்குள் மாற்றம் நிகழ்ந்தது.

இக்காலகட்டத்தில், மிண்டோ - மார்லியின் திட்டங்களினால் நாட்டில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இசுலாமியருக்கு தனி பிரதி நிதித்துவமும், தனி வாக்காளர் முறையும் அளிக்கப்பட்டதால் இந்துக்கள் முஸ்லீம்களிடையே பிரிவினையை உண்டாக்கிவிட்டதாக இந்துககள் கூச்சல் போட்டு அத்திட்டத்தை கைவிடும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். இந்திய வரலாற்றை எழுதும் பல வரலாற்றாசிரியர்கள் இத்திட்டம்தான் இந்து முஸ்லீம் பிரிவினையை உருவாக்கி நிலைபடுத்திய பிசாசு (evil) என வர்ணிக்கிறார்கள்.

இந்த பிரிவினை கூச்சல்களை பண்டிதர் தொடர்ந்து மறுத்து வந்ததோடு, அதை சொல்லக்கூடிய தகுதி இந்துக்களுக்கு கிடையாது. என்றும், மாறாக இந்துக்களுக்குள் உள்ள சாதியாச்சார பிரிவினைகள் துவேஷங்களாய் வெளிபடும் அவலங்களை சுட்டிக்காட்டினார்.

"பிச்சைக் கொடுப்பதில் தங்கள் சாதியோரை மட்டிலும் பார்த்து பிச்சைக் கொடுப்போர் வசம் இராஜாங்கப் பார்வை

53 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை