பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பி.ஏ. எம்.ஏ பட்டம் பெற்றவர்கள் சுயசாதி அபிமானிகளாகவும், தம் குடும்பத்தையும், தன்சாதியையும் மட்டுமே கம்பெனிக்கு சுய நலவாதிகளாக இருக்கிறார்கள் எனவே இது போன்ற தகுதிகளை முன்வைக்காமல், அந்தந்த சாதிகளில் எவர் திறமையானவர் - ஒழுக்கமுள்ளவர் என்பவரை கண்டெடுத்து ஆலோசினை சங்கத்திற்சேர்க்க வேண்டும் (1:224) என பண்டிதர் பதிலடித் தந்தார்.

அதே நேரத்தில் தலித்தல்லாதவர்களில் உள்ள நேர்மையான சக்திகள் என்று தான் கருதியவர்களுக்கு தமது ஆதரவை பண்டிதர் எப்போதும் வெளிபடுத்தி வந்தார். பரோடா ராஜா கெய்க்வாட், சர்வ சாலை இராமசாமி முதலியார், டி.எம். நாயர், பொப்பிலி அரசர் ஆகியோர் மீது உயர்ந்த அபிப்ராயத்தை பண்டிதர் வைத்திருந்தது மட்டுமின்றி, அவர்கள் சட்டசபையிலும், நிர்வாக குழுவிலும் நியமிக்கப் பட்ட போது அதைப் பெரிதும் வரவேற்று எழுதினார். இப்படி தன் கருத்துக்களை வெளிப்படுத்துயதின் மூலம் தலித்தல்லாத பிற சமூக மக்களில் முற் போக்கு சிந்தனையுள்ளவர்களில் கணிசமானவர்கள் ஆதரவு அவருக்கு இருந்ததை தமிழன் இதழைப் புரட்டும் யாவருக்கும் புலப்படும்.

பண்டிதரின் பணிகள் முன்னேற்றமான திசையில் நகர்ந்த நிலையில் அவரது கோரிக்கைகளில் சில மட்டுமே அரசினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவ கோரிக்கை மட்டுமே நிலுவையிலிருந்தது. எனவே அவர் தம் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். 1910 சூலைமாதக் கடைசியில் இந்திய கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபுவும், சென்னை மாகாண ஆளுநராயிருந்த ஆர்த்தர் லாலி பிரபுவும் தம் பதவிகாலம் முடிந்து இங்கிலாந்து போவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அவர்கள் பதவிக்கு மற்றவர் வரும்வரை அவர்கள் இருக்க வேண்டிய நிலையில் அப்போதும் தம் கோரிக்கைகளை நினைவுபடுத்த மறக்கவில்லை.

"ஏறக்குறைய ஆயிரம் வருடங்களாக தாழ்ந்த சாதியர்களாக நசுக்கப்பட்டு வந்த பூர்வ சாதி பேதமற்ற திராவிடக் குடிகள்மீது கிருபா நோக்கம் வைத்து தற்கால பிரிட்டிஷ் ஆட்சியின் கருணையால் முன்னுக்கு வந்து

விவேக மிகுந்தவர்களா யிருப்பவர்களிற் சிலரைக் கண்டெடுத்து லெஜிஸ்லேட்டிவ் சங்கத்தில் சேர்த்துவிட்டு போய்விடுவார்களாயின் ஆயிர வருடகாலம் அல்லலடைந்திருந்த அறுபது லட்சத்திற்கும் மேற்பட்ட குடிகளை அல்லலிருந்து ஆதரித்து முன்னேறச் செய்தவர்கள் கவர்னர் ஜெனரல் மின்டோ

6 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை