பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Representation)

6. கிராம நிர்வாகப் பணிகளில் தலித்துகளுக்கு அதிகாரம். (Decentralisation of village Administration)

7. கோவில்களை பொதுவாக அனைவருக்கும் திறந்து விடுதல்.

8 பொது இடங்களில் நுழைய உரிமை.

9. கிராமத்தில் பயன்படுத்தாத நிலங்களை பங்கிட்டு தலித் மக்களுக்கு கொடுப்பது.

10. பொது கிணற்றில் நீர் எடுக்கும் உரிமை

அவரின் இரண்டாம் கட்ட கோரிக்கைகள்:

1. அரசு பணிகளில் தலித்களுக்கான இடஒதுக்கீடு

2. ராணுவத்தில் மீண்டும் தலித்துகள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும், ஒழிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் ரெஜிமெண்டுகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்.

3. அரசு பணிகளில் அந்தந்த சாதியாரின் தொகைப்படிக்கு பிரதி நிதித்துவம் (Reservation by populations of castes)

4. மைய, மாகாண சட்ட சபைகளில் தலித் மக்களின் தனிப் பிரதி நிதித்துவம் (Seperate Representations in central and provincial legislation)

5. சகல சாதியருக்கும் அவரவர் தொகைக்கேற்ப சட்டசபைகளில்

நிதித்துவம் (Representation by Reserevation to all castes)

6. சாதிபேதமற்ற திராவிடர்கள், அல்லது ஆறுகோடி தீண்டாதார், இந்துக்கள், முஸ்லீம்கள், யுரேஷியர்கள், இந்திய கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள். ஐரோப்பியர் என அனை வருக்கும் அவரவர் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்

7. சாதி பேதம் ஒழிக்கப்பட்டால் இந்த ஒதுக்கீட்டு அடிப்படையிலான பிரதிநிதித்துவம் தேவையில்லை.

8. தலித்துகள் பொது இடங்களில், நுழைய, பொது சொத்துக்களை பயன்படுத்த உரிமை

9. கிராம பொது நிலங்கள், பயன்படுத்தாத நிலங்கள் ஆகியவற்றை தலித்துகளுக்கு வழங்க வேண்டும்.

69 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை