பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. நிலம் வைத்துக்கொண்டு உழைக்காமல் உட்கார்ந்து தின்னும் சோம்பேறிகளிடமிருந்து நிலத்தை எடுத்து அந்நிலத்தில் உழும் ஏழை குடிகளுக்கு கொடுக்க வேண்டும்.

11. பிஏ, எம்ஏ பட்டம் பெற்றவர்களுக்கே அந்தஸ்தான உத்யோகம், சட்டசபை உறுப்பினர் பதவிகளை வழங்காமல், அந்தந்த குலத்தில் உள்ள கற்ற ஒழுக்கமுள்ளவர்களுக்கு அப்பதவிகள் தருதல் வேண்டும்.

12. சட்டசபைகளில் அந்தந்த மொழி பேசுவோருக்கு மொழி பெயர்ப்பு செய்தல் வேண்டும்.

இவைகளை விளக்க வேண்டிய அவசியமில்லை, இவை ஒவ்வொன்றுமே அதற்கான விளக்கமாக இருக்கிறது. எனினும் வாசகரை கேட்டுக் கொள்வதெல்லாம் இந்த கருத்துக்களை இதற்கு பிற்பாடு வந்த வரலாற்று கட்டங்களோடு பொருத்தி பார்க்க வேண்டும் என்பதுதான்.

ஏனெனில் பண்டிதர் தன் அரசியல் பணியைத் தொடங்கிய காலத்திற்கு முன்பு இந்திய வரலாற்றில் எங்கும் இதுபோன்ற கருத்துக்களை காணமுடியாது. அதேபோல பண்டிதர் வாழ்ந்த காலத்திலும் மற்றவர்களிடமிருந்து இது போன்ற கருத்துக்களை காண முடியாது. பண்டிதர் வாழ்ந்த கால கட்டத்தில் பிற சாதியினர், மதத்தினர் தமக்கான உரிமைகளை - சலுகைகளை மட்டும் கோரினார்களேத் தவிர அனைத்து பிரிவு மக்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் முன்வைக்கவில்லை. அதுவுமின்றி அனைத்து பிரிவினருக்கான விகிதாச்சாரத்தை (Ratio) பண்டிதர் மட்டுமே முதன் முதலில் முன்வைக்கிறார். இந்திய வரலாற்றில் இது புரட்சிகரமான சமூகநீதி முன்வைப்பு

இந்த கருத்துக்களின் வரலாற்று பாத்திரத்தை மதிப்பிட அது நிறைவேறிய சூழல் நிலவியதா? அதுவும் பண்டிதர் காலத்தில் என கேள்வி எழுப்பப்படலாம். இப்படி ஒரு மறுப்பான கேள்விக்கு பதில்

பண்டிதர் காலத்திலேயே அரசு பணிகளில் தலித்துகளுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்பட்டதையும், அங்கு அவர்கள் பட்ட இடுக் கண்கள் களையப் பட்டதையும் பலமுறை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், 1892 முதல் தலித் மக்களுக்கு தனி பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதையும், கர்னல் ஆல்காட் உதவியுடன் தலித் மக்களுக்கு 3 பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டதும், அரசின் லேபர் துறை சார்பாக தாழ்த்தப்பட்டோருக்கென தொடங்கப்பட்ட பள்ளிகளும் பண்டிதரின்

கௌதம சன்னா / 70