பக்கம்:பண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோரிக்கையின் விளைவுகள்.

அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு என்ற கொள்கைக்கு வடிவம் கிடைக்க முயற்சிகள் 1912ல் அரசுப் பணிகள் குறித்து விசாரித்த ராயல் கமிஷன் முன்பு பண்டிதரின் கருத்துக்களில் தாக்கம் பெற்ற தலைவர்கள் சாட்சியம் அளித்தனர். இந்த குழுவின் முன்பு டாக்டர் நாயர் உள்ளிட்ட பிற்பட்டோர் தலைவர்கள் சாட்சியம் அளித்தும்கூட அந்த கோரிக்கை சட்டப்படி அடைய நீண்டகால மாயிற்று.

சட்டசபைகளில் அனைத்து பிரிவினருக்கும் தனிப் பிரதிநிதித்துவம் கேட்ட பண்டிதர். அதை நியமன முறையிலேயே வேண்டுமென வலியுறுத்தி வந்தார். ஏனெனில் தேர்தல் முறையில் சாதி இந்துக்களின் ஆளுமையில் தலித் மக்கள் வாக்களிக்க முடியாது என்றும், ஊழல் பேர்வழிகளான அவர்களால் தம்முடைய உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்காது என்று அஞ்சியதாகும், அதனால்தான் மிண்டோ - மார்லி சீர்திருத்தத்திற்குப் பிறகு மாண்டேகு - செம்ஸ் போட்டு சீர்திருத்தத்தில் நியமன முறையில் தலித் தலைவர்கள் சட்டசபைகளில் நியமிக்க ப்பட்டார்கள். பண்டிதர் காலத்தில் தலித் மக்களுக்கு 6 பேர் என்றும் பின்பு 8 பேராகவும் கோரிக்கை வைக்க, மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தத்தில் அது 12 பேராகவும் உயர்ந்தது. நியமனமும் நடந்தது. இது தாழ்த்தப்பட் டோருக்கானது என்றால், அவர் முஸ்லீம்கள், இந்திய கிறித்தவர், ஐரோப்பியர், ஜைனர், பாரசீகர், சீக்கியர் ஆகியோருக்கும் கோரினார். இவை பின்னாளில் சட்டமாயின. இவை பண்டிதரின் கோரிக்கையினால் விளைந்தது என்பதை ஒப்புக் கொள்ளாமல் போனாலும் அக்கருத்தை முதலில் முன்வைத்தவர் பண்டிதர் என்பதை மறுக்க முடியாது.

பார்ப்பனரல்லாதார் தங்களுடைய கொள்கைகளை முன்வைப்பதற்கு முன்பே பண்டிதர் முன் வைத்தார் எனில் அவரது முன்வைப்புகளையும், பார்ப்பனரல்லாதாரின் முன்வைப்புகளையும் ஒப்பிட்டு பார்ப்பவர்கள் நிறைய வேறுபாடுகளைக் காண முடியும், பார்ப்பனரல்லாதாரின் கோரிக்கை படித்த வர்க்கத்தின் கோரிக்கை என்பதை எடுத்த எடுப்பிலேயே காட்டிவிடும் அதனால்தான் அது அரசு துறைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. பண்டிதரின் முன் வைப்புகள் அடித்தட்டிலிருந்து முன்வைத்த கோரிக்கைகள், அதனால்தான் அது விரிவான தளத்தில் இயங்கியது. குறிப்பாக நிலத்தை பகிர்ந்தளிக்க அவர் வலியுறுத்தியதை எந்த பார்ப்பனரல்லாத தலைவரும் வலியுறுத்தவில்லை, ஏனெனில் அவர்களெல்லாம் பெரும் நில உடைமையாளர்களாக,

71 / பண்டிதரின்.... சமூகநீதிக் கொள்கை