பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இ. புலவர் கா. கோவிந்தன் அனைவரும் தமிழ்நாட்டின் செல்வங்களைக் கொள்ளை யிட்டுச் செல்வதில் குறியாய் இருந்தனரேயல்லது, தமிழக ஆட்சியைக் கைப்பற்றி ஆள்வதில் குறியாய் இருந்தாரல்லர். இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளும், ஒரு நாட்டின் பொருள் வளம் கருதிப் போரிடுவதே போரின் முதற்படியாகும்; அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றக் கருதிப் போரிடுவது அதற்கு அடுத்தபடியானதே என்ற உண்மையையே உறுதி செய்கிறது. இந்திய நாட்டிற்கு அப்பாலிருந்து இந்நாட்டின் மீது படையெடுத்து வந்தவருள் தலைசிறந்தோனாகிய கஜினி முகம்மது, இந்தியாவின் மீது பன்னிரண்டு முறை படையெடுத்து வந்தும், இந்திய நாட்டில் தன் அரசை நிலை நாட்ட எண்ணினானல்லன்; படையெடுத்து வந்த ஒவ்வொரு முறையும் இந்நாட்டு விலை மதிக்க வொண்ணா மாநிதிகளைக் கொள்ளை கொண்டு போவது ஒன்றே அவன் குறியாய் இருந்தது, அதைப் போலவே, பின்னர்ப் பேரரசு அமைத்து இருநூறு ஆண்டுகள் அரசோச்சிய ஆங்கிலேயரும், முதற்கண், இந்நாட்டின் வளத்தின் மீது காதல் கொண்டு, அதை வாள் முறையால் அல்லாமல் வாணிக முறையால் கொள்ளை யிட்டுச் செல்வதில் கருத்தைச் செலுத்தினரேயல்லது, நாடு பற்றி ஆள நினைத்தாரல்லர். "பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதுர்ர், நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு இறுக்கல் வேண்டும் திறையே” என அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழ்பாடும் ஒளவையார் கூற்றிலும், "கொண்டி வேண்டுவனாயின், கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே” எனப், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் புகழ்பாடும் ஐயூர் முடவனார்