பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 103 பாராட்டுரையிலும் “பலிகொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்தி” எனத் தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் புகழ் பாடும் அரிசில் கிழார் உரையிலும், பண்டைத் தமிழ் மன்னர் பலரும், பகை நாட்டு மண்ணின் மீது காதல் கொள்ளாது, அந்நாட்டுப் பொன்னின் மீது காதல் கொண்டே போருக்கு எழுந்தனர்; அப்பொன் கிடைத்த வழி, அம் மண்ணை மதியாதே மீண்டனர் என்ற உண்மை வெளிப்பட்டு, போரின் தொடக்க நிலை பகைநாட்டின் ஆடும், மாடும், பொன்னும் மணியும் போலும் பொருள் நாட்டம் குறித்ததே ஆம் என்ற கூற்றிற்கு அரணளித்து நிற்பது காண்க. - பசியால் வருந்திய பாலை நிலத்து மறவன், அது போக்கிக் கொள்ள முல்லை நிலத்து ஆயரின் ஆனிரை களைக் களவாடிச் செல்லத், தம் உடைமைகளாம் அவ்வானிரைகளை மீட்கும் அவ்வாயர் முயற்சியில் தொடங்கி, வளங்குறைந்த நாடுடையான் ஓர் அரசன், அது நிறைந்த நாட்டின் வளத்தைக் கொள்ளை கொள்ளப் படைதொடுக்க, வளநாடுடையான் தன் நாட்டு வளத்தைக் காப்பான் வேண்டி வந்தானை வென்று ஒட்டப் படை எடுத்த நிகழ்ச்சியாக உருப்பெற்ற வெட்சிப் போர் நிலையோடு தமிழகப் போர் வளர்ச்சி அடங்கி விடவில்லை. வாழ்க்கைத் தரத்தின் உயர்விற்கேற்ப, பகை நாட்டுப் பசுநிரைகளை மட்டுமே கவர்ந்து வரக் கருதியதைக் கைவிட்டுப் பகை நாட்டுச் செல்வங்கள் அனைத்தையுமே கவர்ந்து வரும் வழக்கம் மேற்கொண்டு வாழ்ந்த மன்னன், தன் நாட்டில் பொருட் குறைவுண்டாகுந் தோறும் படையெடுத்துப் போவதால் நேரும் இடையூறு களை எண்ணி, அவ்வாறு பல முறையும் படையெடுத்துச்