பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 107 வஞ்சியாம் என்னும் உண்மைப் பொருள்பட நிற்பதாகவும், ஆசிரியரின் உள்ளத்தை உணரமாட்டாமையால், "எஞ்சா மண்ணாசை அஞ்சு தகத்தலைச் சென்று, வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று” எனத் தம் மனம் போனபடி யெல்லாம் கண்ணழித்துக் கொண்டு “நசை” என்பது பெயரடையாகவும், அதை நசையுடைமையான் எனும் காரணப் பொருள் உணர்த்தும் வினையடையாக்கியும், எஞ்சா என்பது, அளவிறந்த எனும் பொருளுடையதாகி, “நசை” என்பதைச் சிறப்பிக்கும் பெயரடையாகவும், அதற்கு இடையீடு ஆகிய எனும் பொருள் கொண்டு இடையீடாகிய எனவே, எவற்றிற்கு இடையீடு ன்னும் வினா எழல்கண்டு, "இருபெரு வேந்தர்க்கும் இடையீடாகிய" என மூலத்தில் இல்லாததை உரையில் வருவித்துக் கொண்டு "எஞ்சா மண்" என, மண் என்பதைச் சிறப்பிக்கும் பெயரடையாகக் கொண்டு இடையீடாகிய மண் எனப் பொருள் கூறியும், மண் ஆசை கொண்டு வந்த வேந்தன் அஞ்சச் செல்வதே இயல்புடையதாகவும், அதை விடுத்து, "ஆண்டு வாழ்வார்" என ஆசிரியர் அறியாத மக்களை வலியப் பிடித்து இழுத்து வந்து நிறுத்தி, அவர்க்கு அஞ்சுதல் உண்டாகச் சென்று எனப் பொருள் கூறி, மண் ஆசை கொண்டு வந்தானை, மண்ணுக்கு உரியான் அடல் குறித்தன்று என அட்டவன் இன்னான், அடப்பட்டவன் இன்னான் என்பது தெளிவுறப் புலனாகவும், அவ்வாறு கொள்வதை விடுத்து, அட்டவன் யாவன் அடப்பட்டவன் யாவன் என்பதை அறிய மாட்டாது மயங்கத் தக்கவகையில், "ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் மாத்திரைத்து” எனப் பொருள் கூறியும், பிழைபடுவாராயினர் ஆசிரியர் நச்சினார்க் கினியர். -