பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இ. புலவர் கா. கோவிந்தன் மண்ணாசை கொண்டு வந்தானை, மண்ணுக்கு உரியவன் வென்று ஒட்டும் நிகழ்ச்சியில், மண் ஆசை கொண்டு வந்தான் செயல் பழியுடையதாக, அவனை வென்று ஒட்டிய மண்ணுக்கு உரியான் செயல் ஒன்றே பாராட்டற்கு உரியதாகவே, பாராட்டிற்கு உரிய அவன் செயலே, வஞ்சி ஒழுக்கம் என்னும் பெயர் பெற்றுப் பாராட்டப்பெறும் என்பதே ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகவும், அவர் உள்ளம் உணராது, அச்சூத்திரத்திற்கு அவ்வாறு பிழை பொருள் கொண்டமையால், "ஒருவன் மண் ஆசையால் மேற்சென்றால், அவனும் அம்மண் அழியாமல் காத்தற்கு எதிரே வருதலின், அவ்விருவரும் மண் நசையான் மேற் சேறல் உளதாதலின் அவ்விருவரும் வஞ்சி வேந்தர் ஆவர் என உணர்க," என வேண்டா விளக்கமும் கூற வேண்டியதாகி, தன் மண் காக்கும் கடப்பாடு கொண்டு சென்றானுக்கும் மண் ஆசையாம் மாசு கற்பித்து மேலும் மேலும் பிழை நெறியே சென்று விட்டார் ஆசிரியர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் உள்ளம் உணரமாட்டா அதே பிழையால் அச்சூத்திரத்திற்குப் பொருள் கூறுங்கால், "ஒழியாத மண்ணை நச்சுதலை யுடைய வேந்தனை மற்றொரு வேந்தன் அஞ்சுதகத்தலைச் சென்று அடல் குறித்தது" என்று ஆசிரியர் கொள்கைக்கு ஒத்த பொருளே கூறிய உரையாசிரியர் இளம்பூரணர், விளக்கங் கூறுங்கால், "ஒழியாத மண்ணை நச்சுதலாவது வேண்டிய அரசர்க்குக் கொடாமை” எனக் கூறி, மண் நசைக் குற்றத்தை மண்ணுக்கு உரியானுக்கும் ஏற்றிப் பிழைபட்டுவிட்டார். தொல்காப்பியத்திற்கு, உரையாசிரியர் இளம்பூரணர், உச்சிமேல் புலவர்கொல் நச்சினார்க்கினியர் ஆகிய இருவர்