பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 இ புலவர் கா. கோவிந்தன் தொல்காப்பியனார். அவ்வாக்கப் போர்களைப் பாராட்டி அப்போர் நிகழ்ச்சிகளை விளக்கி விரித்து உரைப்பதே அவர் கருத்தாம் என்றாலும், அவ்வழிவுப் போர்கள் இல்லாதபோது, அவ்வாக்கப் போர்கள் இல்லை; அவை நிகழாமல் இவை நிகழா; ஆகவே, அவ்வாக்கப் போர்களைக் கூறுவதன் முன்னர் அவ்வழிவுப் போர் களையும் கூறியுள்ளார். இந்த உண்மையை உணர மாட்டாமையால் புத்துரை காணும் இக்கால ஆராய்ச்சி யாளர்களும் "மண் ஆசையால் பிறரது சோர்வு நோக்கி யிருக்கும் வேந்தன் ஒருவன், தன் மேல் படையெடுத்து வருவதற்கு முன்பே, தான் அவனை வெல்லுவதற்கேற்ற காலம், இடம், வலி முதலியவற்றை எண்ணி, அவனது நாட்டின் மேல் போர் கருதிப் புறப்பட்டுச் சேறல் நாடாள் வேந்தனது கடமையாகும்; இக்கடமையினை உளத்துட் கொண்டு ஒழியாத மண்ணாசையுடைய பகை வேந்தனைப் பொருது அழித்தல் கருதி, அவன் அஞ்சும்படி படையுடன் மேற்சேறல் வஞ்சித் திணையாகும்” எனவும், "வஞ்சித் திணைக்கு ஆசிரியர் கூறிய இலக்கணத்தினை நோக்குங் கால் இருபெரு வேந்தருள் ஒருவனே மேற்சேறற்கு உரியான் என்பது நன்கு விளங்கும்" எனவும் விரிவுரைகள் வழங்கி யுள்ளார்கள். மண்ணாசை யுடையான் படையெடுத்து வரா முன்பே அவன் குறிப்பறிந்து படையெடுத்துப் போவதே வஞ்சி ஆகும் என்றால், அதற்கேற்ப ஆனிரை கவரும் குறிப்பு அண்டை நட்டானுக்கு உளது என அறிந்து, அவன் கவர வருவதன் முன்பே, அவன் மீது படையெடுத்துப் போவதே வெட்சி; அரணைக் கைப்பற்றி அழிக்கும் கருத்து பகைவன் உள்ளத்தில் உருப்பெறுகிறது என்பதை உணர்ந்து,