பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 இ புலவர் கா. கோவிந்தன் கொற்றத்தின் பின்னர்க் கூறப் பெற்றிருப்பினும், அதற்கு முன்னும் கொடுத்தல் எய்திய கொடைமைக்குப் பின்னும் நிகழ்வதாகவே இதைக் கோடல் வேண்டும். படையில் பணிபுரிவார் பலராயினும், அவருள், அப்போருக்குத் தலைமை தாங்கிச் சென்று வெற்றி பெறத் தக்கவர் யாவர் என்பதை ஆராய்ந்து, நல்ல ஒர் உழவன் தன்பால் உழுவெருதுகள் பலவுள என்றாலும், அவற்றுள் நல்ல எருதுகளையே தேர்ந்து எடுத்துப் பணிகொள்வது போல், தேர்ந்து கொள்வதும், அவனுக்கு ஏனாதிப் பட்டமும் மோதிரமும் சூட்டிப் படைத் தலைவன் ஆக்குவதும், அவ்வாறு சிறப்புப் பெற்ற பெருமகிழ்ச்சியால் அப்படைத் தலைவன், தன் பெருமையைப் பாராட்டலும் ஆகிய இந்நிகழ்ச்சிகள் எல்லாம் ஒரு வினையைப் பலகாலம் எண்ணித் தொடங்குவானுக்கு இயலுமே யல்லாது, திடுமெனக் களம் புகுவானுக்கு இயலாது. பகைப்படை எல்லைக்குள் புகுந்துவிட்ட நிலையில், அரசன் இவை போலும் நிகழ்ச்சிகளால் காலம் கடத்துவானாயின், அவன் நாட்டின் பெரும் பகுதியை இழக்க நேரிடும்; ஆகவே, இவற்றை அவன்பால் எதிர்நோக்குதல் இயலாது; ஆகவே, மாராயம் பெற்ற நெடுமொழியும் மண்ணாசை கொள்வான் வினையே அல்லது மண்ணுக்கு உரியான் வினையன்று என்றே கொள்க. 'கொடுத்தல் எய்திய கொடைமை' என, ஆசிரியர் தொல்காப்பியனார் பெயர் குட்டிய துறைக்குப் பு.வெ. மாலையார், 'மாராய வஞ்சி' எனும் பெயர் சூட்டி விட்டமையால், "மாராயம் பெற்ற நெடு மொழி” என்ற இத்துறைக்கு, வாளா, "நெடுமொழி வஞ்சி” என்பதையே பெயராகச் சூட்டியுள்ளார்.