பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 149 புலவர்கள் பாராட்டைப் பெறும் உரிமையுடையது, அப்பின்னோன் மேற்கொண்ட போரே ஆகும். அப்போர் நிகழ்ச்சிகளில், அழிவுப் போர் மேற்கொண்டு வந்த முன்னவன் வெற்றி கொள்ள, ஆக்கப் போர் மேற்கொண்டு சென்ற பின்னவன் தோற்க. அவன் நாடு மாற்றான் கைப்பட்டுப் போனதும் ஒரோ வழி உண்டு எனினும், அவ்வெற்றி பாராட்டுதற்கு உரியதாகாது. "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப் படும்” என்பது போல், ஆன்றோர், அப்போர் முடிவு கண்டு கலங்கிக் கண்ணிர் சொரிவரே அல்லது, முன்னவன் வெற்றியைப் பரணி பாடிப் பாராட்டார். ஆகவே, "முதியோள் சிறுவன் படை அழிந்து மாறினன்' என்று பலர் கூறக் கேட்ட ஒரு வீரத் தாய், என் மகன் மண்டமர்க்கு உடைந்தனனாயின், உண்ட என் முலை அறுத்திடுவேன்! என வஞ்சினம் கூறி, வாள் எடுத்துக் களம் புகுந்து, ஆங்கு வீழ்ந்திருந்த வீரர் உடல்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து வருங்காலை, அப்பிணங்களுள், உருவு தெரியாதவாறு சிதைந்துபோன தன் மகன் பிணமும் ஒன்றாதல் கண்டு, அவனைப் பெற்ற ஞான்று கொண்ட பேரின்பத்திலும் பெரிய பேரின்பம் கொண்டாள் என்ற பாராட்டில், அத்தாயின் மகன் ஆற்றிய போர், அவள் தனித்து நடந்து சென்று காணலாம், அண்மையிடத்ததாகத் தோன்றவே, அது தன் மண் காக்க, தன் நாட்டு எல்லையில் நடந்த போரே ஆதல் வேண்டும் என்பதும், மேனாள் போரில், தன்னை யானை எறிந்து களத்து ஒழிய, நெருதல் உற்ற செருவில் கொழுநன் பெருநிரை விலங்கிப்பட்டு ஒழிய, இன்றும் செருப்பறை கேட்டு, ஒரு மகன் அல்லது உற்ற துணையாகப் பிறர் எவரும் இலராகவும், அவ்விள