பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 புலவர் கா. கோவிந்தன் செய்யும் அம்மண்ணுக்குரிய மன்னனைப் புகழும் நிலையிலும் சூத்திரம் அமைத்து இருப்பதால் நன்கு புலனாதல் காண்க. மண்ணாசை கொண்டு படையெடுத்து வருவானை அம்மண்ணுக்கு உரியான் வென்று ஒட்டித் தன் மண் காத்தலைக் கூறுவதே வஞ்சித் திணையின் தொல்லியல் பாம் எனினும், தன் நாட்டு எல்லையை விரிவாக்குவதும் வேந்தன் கடனாம் என்ற நிலை பிறக்கவே, பிறர் மண் கொள்வதும் பழிக்கப்படும் நிலை இழந்து பாராட்டிற்கு உரியதாகி விட்டது. தன் நாட்டின் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்பத் தன் நாட்டின் பரப்பினைப் பெருக்க வேண்டுவது தன் கடன் என உணர்ந்த அரசன், தன் நாட்டைச் சூழ இருந்த காடுகளை அழித்து நாடு கண்ட பின்னரும், இடம் போதாமை கண்ட போது, தான் செய்யக் கூடியது தன் அண்டை நாட்டின் ஒரு பகுதியைத் தன் நாட்டோடு இணைத்துக் கொள்வதே எனத் துணிந்து, அதை மேற்கொள்வன் ஆதலின், அச்செயலும் பாராட்டினுக்கு உரியதாகி விட்டது. உலகனைத்தும் தம் ஒரு குடைக் கீழ் வைத்து ஆள வேண்டும் என்ற பேராசையுடைய வேந்தர்களைத் "தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி, வெண்குடை நிழற்றிய ஒருமையோர்” (புறம்: 189) என்றும், "பொது மொழி பிறர்க்கு இன்றி முழுதாளும் செல்வர்”, (மருதக்கலி: 3) என்றும் பொது வகையால் பாராட்டிய புலவர் ஒரு சிலராக, தலைச் சங்கப் புலவர் என்ற ப்ாராட்டினுக்கு உரியவராகிய முரஞ்சியூர் முடிநாகராயர், பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை, "சேர நாட்டைப் போலவே, சோணாடும் உன் உடைமை ஆகிவிடவே, அச் சோணாட்டை அடுத்த கீழ்க் கடலில் தோன்றிச் சேர