பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 155 முரண்பட்டு அது நிகழக் காரணமாய் இருந்த மண்ணாசைப் போரே, வஞ்சிப் போராக மாறி வழங்கும் நிலை பிறந்துவிட்டது. "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப் படுஉம் தோற்றம் போல இருகுடை பின்பட ஓங்கிய ஒரு குடை உருகெழு மதியின் நிவந்து சேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி வெல் போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாயே! நூதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார் கடிமதில் பாயும் நின் களிறு அடங்கலவே, போர் எனில்புகலும் புனைகழல் மறவர், 'காடு இடைக் கிடந்த நாடு நனி சேய செல்வேம் அல்லேம்' என்னார். கல்லென் விழவுடை ஆங்கண், வேற்றுப் புலத்து இறுத்துக் குணகடல் பின்னதாகக், குடகடல் வெண்தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே." -புறம் 31, இவ்வாறு, மண்ணாசை கொண்டு வருவானை வென்று ஒட்டி மண் காக்கும் காவலன் செயலே பாராட்டற்குரியது என்ற நிலை போய், மண்ணாசை கொண்டு மாற்றானை வெல்லும் மன்னவன் செயலும் பாராட்டற்கு உரியதாகும் என்ற நிலை பிறந்துவிடவே, அவ்விருவர் செயலுக்கும் வேறு வேறு பெயர் அளிக்க வேண்டுவது இன்றியமையாததாகி விட்டது. ஆசிரியர் தொல்காப்பியனார் ஆனிரை மீட்டலே வெட்சி எனக் கொண்டு அதற்கு அளித்திருந்த அவ்வெட்சிப் பெயரை,