பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 159 முற்பகுதி மண் குறித்து எழும் மன்னவன் செயல் கூறப், பிற்பகுதி, அது காப்பவன் செயல் கூறுவதாகவே அமைந்துள்ளது. வஞ்சி முதலாகக், கொடை வஞ்சி ஈறாக உள்ள பதினான்கு துறைகளும் மண் ஆசை கொண்டு வருவான் தொழில்களை உணர்த்த, "குறுவஞ்சி" முதலாக, "நல்லினை வஞ்சி” ஈறாக உள்ள பிற்பட்ட துறைகள் ஏழும், வந்தானை வென்று ஒட்டுவான் தொழில்களை உணர்த்துவனவாகவே அமைந்திருப்பது, அது கற்பார்க்கு நன்கு புலனாகும். மண்ணாசை உடைய மன்னவன் செயல் கூறவது எனக் கருதப்பட்ட, பு.வெ. மாலை வஞ்சித்திணை இயல்பு, இவ்வாறு, அம்மன்னவன் வினையோடு, அவனை வென்று ஒட்டித் தன் மண் காக்கும் மன்னவன் வினையையும் ஒரு சேரக் கூறுவதாய் அமைந்துவிட, மண் காக்கும் மன்னவன் வினை கூறுவதாகக் கொள்ளப்படும் வெண்பா மாலைக் காஞ்சித் திணை இயல்பும் அதற்கு அரண் அளிப்பதாக அமையவில்லை. காஞ்சித் திணைப்பொருள் விளக்குவதாகக் கூறப்படும், அக்காஞ்சிப் படலத்துள் வந்துள்ள தலைப்புக்கள் இருபத்தைந்தனுள், ஒரு சிலவே மண் காக்கும் காவலன் செயல் விளக்கு வனவாக, அதுவும் கூறியது கூறல் என்னும் குற்றம்படும் வகையில், எஞ்சிய எல்லாம் நிலையாமைப் பொருள் விளக்குவனவாகவே உள்ளன. ஆகவே, ஆசிரியர் தொல் காப்பியனார் கொள்கையை ஒட்டி, மண் ஆசை கொண்டு வருவானை வென்று ஒட்டி மண் காப்பதே வஞ்சி, நிலையாமை குறிப்பதே காஞ்சி என்று கொள்வதே பொருந்துவதாம் என அறிக. - மண் ஆசை குறித்த போர் உணர்த்தும் புறத்திணையாகிய வஞ்சி, இருத்தல் பொருள் உணர்த்தும்