பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 165 எண்ணிப் பார்த்து, அவையெல்லாம் தனக்கு நல்லவாதல் கண்ட பிறகே களம் புகுந்திருத்தல் இயலாது. உள்ளது ஒரு சில படையே எனினும், அது கொண்டே களம் புகுந் திருப்பன்; தனக்குத் துணை புரிவாரைக் கண்டு, அவர் துணையினை நாடிப் பெறுதல் வேண்டும் என்ற நினைவுதானும் அவனுக்கு அப்போது எழுந்திராது. ஆக, இந்நிலைகளால் வந்தவன் கைவலுக்க, தன் கை வலுவிழக்க, வந்தானை வெல்ல மாட்டாது தோற்றுப் போவது, மண்ணுக்கு உரியானுக்கு ஒரோ வழி உண்டாதலும் கூடும். தோல்வியுற்றது தன் படை என்பதனாலேயே மண்ணுக்குரிய மன்னவன், பகைவனுக்குப் பணிந்து போக வேண்டும் என்பது தேவையில்லை. சிறிது காலம் கழியின், வந்தவனை வென்று ஒட்டுவதும் இயலும். அதற்குள் அவனுக்கு ஏற்புடைய காலமும் வந்து வாய்த்துவிடும். அவனோடு நட்புடையவராகிய அரசர் சிலர், அவனுக்குத் துணையாகத் தம் படைகளை அனுப்புவதும் செய்வர். ஆகவே, அக்காலத்தை எதிர் நோக்கியிருப்பது அரச முறையாகும். ஆகவே, அக்காலம் வரும்வரை, பகை வனுக்குப் பணியாமலும் அவனால் பற்றப்பட்டுப் பாழுற்றுப் போகாமலும், தன் படையையும் தன்னையும் காத்துக் கொள்ள வேண்டுவது அவன் தலையாய கடமையாகும். அக்கடமையைக் குறைவற நிறைவேற்றும் கருத்துடையராகவே, நம் கன்னித் தமிழ் நாட்டுக் காவலர்கள் தங்கள் தலைநகர்களைத் தலைசிறந்த அரண் களாக அமைத்திருந்தார்கள். பேரூர்கள் ஒவ்வொன்றும் பெரிய பெரிய கோட்டைகளாகவே அமைய வேண்டுவது அக்காலத் தமிழகத்தின் இன்றியமையாத் தேவையாக அமைந்து விட்டது.