பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஒ. புலவர் கா. கோவிந்தன் பண்டைத் தமிழகம், ஒரு நாடு செல்வத்தில் சிறந்து வாழ வேண்டுமாயின், அது நீர்வள நில வளங்கள் தரும் வற்றாப் பெருவளங்களோடு, வாணிகத் துறையில் வளம் பெற்ற நாடாகவும் திகழ்தல் வேண்டும். வாணிகத்திலும், நில வாணிகத்தைக் காட்டிலும் கடல் வாணிகத்தையே பெருவாரியாக மேற்கொள்ளுதல் வேண்டும். விலை யுயர்ந்த பொருள்களை வெளிநாடுகளிலிருந்து தான் வாங்குவதை விடுத்து, அப்பொருள்களை அப்புற நாடு களுக்குத் தான் வழங்குதல் வேண்டும். பொருள்களை விற்றுப் பொற்காசுகளைப் பெற வேண்டுமே யல்லாது, பொற்காசுகளைக் கொடுத்துப் பொருள்களை வாங்குதல் கூடாது; அத்தகைய வாணிகத்திற்குத் துணை செய்யும் வகையில் வகை வகையான தொழில்களை வளர்த்து, நாட்டை வளம் கொழிக்கும் நாடாக ஆக்குதல் வேண்டும். தன் நாட்டுத் தொழில் வல்லவர்கள் பிற நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அவர்கள் விரும்பி வாங்கும் வகையில், பொருள்களை வனப்புடையவாக ஆக்கித் தருதல் வேண்டும் என்பன போலும் வாணிகத் துறை உண்மைகளை உணர்ந்திருந்தமையால், தமிழகத்துப் பேரூர்கள், பெரும் பொருட் களஞ்சியங்களாகக் காட்சி அளித்தன. இவ்வாறு தமிழகத்துப் பேரூர்களில் வளம் கொழிக்கவே, அப்பேரூர்களை அரசிருக்கையாகக் கொண்டு ஆண்ட அரசர்கள், வளங் கொழிக்கும் நாடுகளுள் புகுந்து, அவ்வளங்களைக் கொள்ளை கொண்டு செல்வதையே வாழ்வுத் தொழிலாகக் கொண்டு திரியும் ஆறலைக் கள்வர்களாலும், மண்ணாசை மிக்க மன்னர் களாலும், பொன்னாசை மிக்க பெருவீரர்களாலும் அழிவு நேராவாறு அந்நகர்களைக் காக்க வேண்டும் என்பதில்