பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 167 கருத்துடையவராயினர். அதனால் அப்பேரூர்களைச் சூழ வலிய பெரிய அரண்களை அமைக்க வேண்டுவது இன்றியமையாததாகி விட்டது. ஒப்பற்ற பேரரசு அமைத்து ஆண்டுவந்த சோழர் குலக் காவலர்கள், தங்கள் நாடு தந்த பெருநிதியை ஈட்டி வைத்திருந்த குடந்தை மாநகரைச் சூழ அமைத்திருந்த அரிய காவற் சிறப்பும், தமிழகத்தின் பேரரசுகளுக்கு எவ்வகையிலும் குறைவுறாத வகையில், அவ்வரசுகளை அடுத்து அரசமைத்து வாழ்ந்திருந்த வேளிர்குலக் குறுநில மன்னர்கள் தங்கள் செல்வத்தைக் குவித்து வைத்திருந்த கொண்கான நாட்டுப் பாழி நகரைச் சூழ அமைத்திருந்த அரிய காவற் சிறப்பும் புலவர் பாராட்டும் பெருமையுடையவாயின. "கொற்றச் சோழர்குடந்தை வைத்த நாடுதரு நிதியினும் செறிய - அருங்கடிப் படுக்குவன் அறன்இல் யாயே’ அகம் : 60 "நன்னன் உதியன் அருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த பொன்." -அகம்: 258 என்ற அகநானூற்றுத் தொடர்களைக் காண்க. தமிழகத்துப் பேரூர்களின் அமைப்பு முறையினைப் பழந் தமிழ் இலக்கியங்களின் கண்கொண்டு நோக்கு வார்க்கு, அவை ஒவ்வொன்றும், அரண் அமைப்பின் இன்றியமையாமையினை உணர்ந்து அமைக்கப் பெற் றுள்ளன என்பது புலனாகும். பேரூர்கள், பெரும்பாலும் பேராற்றங்கரைகளிலேயே தோன்றும் என்பது உலகக் காட்சி உணர்த்தும் உண்மையாகும். ஆறுகள், நாட்டின் வளம் பெருகத் துணைபுரிதலோடு, நல்ல அரணாகவும் அமைதல் அறிந்தே, அக்காலப் பெருமக்கள், பேரூர்களைப்