பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 శ புலவர் கா. கோவிந்தன் படையின் எழுச்சியினைக் கண்ட அளவே, அவன் பகைவர் தம் அரண் வாயிலைக் கவைத்த முட் செடிகளைக் கொண்டு அடைத்து விடுவர் என ஒளவையார் கூறியிருப்பதும் - இன நன்மாச் செலக் கண்டு அவர்கவை முள்ளின் புழை அடைப்பவும்” (புறம்: 98) நம் கருத்திற்கு அரனாதல் அறிக. காவற்காடு அரண் உறுப்புக்களில் சிறந்த ஒர் உறுப்பாகக் கருதப்பட்ட நிலை இக்காலத்தில்தான் இடம் பெற்றது. அவ்வாறு அரணாகக் காடுகளை வளர்க்கத் தலைப்பட்ட நிலையில், அக்காடுகளில் எந்த மரங்களை வேண்டுமாயினும் வளர்ப்பது என்பதை விடுத்துத், தம் கிளைகள் எளிதில் விடுபடாவாறு ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு தம்மை ஊடறுத்துச் செல்ல முனைவார்க்கு இடையூறு பயக்க வல்ல மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வளர்ப்பாராயினர். அவ்வகை மரங்களுள் நொச்சி மரம் தலை சிறந்து விளங்கிற்று. வேலிகளில் வளர்க்கப்படும் மரங்களில் நொச்சியே தலை சிறந்து இருப்பது இக்காலத்திலும் கண்கூடாம். சோழர் தலைநகர்களுள் ஒன்றாகிய உறந்தை நகரைச் சூழ, அரணாக அமைந்து காத்தது நொச்சி மரமே என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. "நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல் முதிர் புறங் காட்டன்ன பல் முட்டின்று." அகம்: 122. இவ்வாறு அரணாக நின்று காப்பதில் நொச்சி தலைசிறந்து விளங்கினமையால் அரண் காக்கும் ஒழுக்கம், நொச்சி ஒழுக்கம் எனப் பெயர் பெற்றதுபோலும்! அல்லது அரண் காக்கும் தொழில் நொச்சி ஒழுக்கம் எனப்பட்டு,