பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 థ புலவர் கா. கோவிந்தன் இல்லாதபோது மீட்சிக்கு இடம் இல்லையாதலின், அரண் மீட்சியைக் கூற வந்த இத்திணையில் அது கூறப்படுவதன் முன், வளைத்துக் கொள்வதும் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்து இதுவே யல்லது, அரணை வளைத்துக் கொள்வது, அதை மீட்டுக் கொள்வது ஆகிய இரு நிகழ்ச்சிகளையும் இருவேறு திணைகளாகக்கொண்டு அவ்விரண்டையுமே பாராட்டு வது அவர் கருத்தன்று; இது முற்றுதல் முன்னர் நிகழப் பின்னர் நிகழும் மீட்டுக் கொள்வதே உழிஞையாம் என்பது விளங்கும் வகையில், "உழிஞைதானே மருதத்துப் புறனே; முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும்,” எனச் சூத்திரம் செய்து முற்றலை முற்படக் கூறிக் கோடலைப் பிற்படக் கூறிய முறையால் தெளிவுறப் புலனாம். அச்சூத்திரத்திற்கு இவ்வாறு பொருள் கொள்வதை விடுத்து, "முற்றலும் கோடலும்” என்பது முற்றுவதும் அழிப்பதும் எனப் பொருள்பட்டு, இரு வினைகளும் வந்து வளைத்துக் கொண்ட பகை வேந்தன் செயல்களையே குறிக்கும் எனப் பொருள் கொள்ளும் வகையில் பொருள் கூறியுள்ளார் ஆசிரியர் இளம்பூரணர். ஒரு வேந்தனுக்கு உரிய அரணைப் பிறிது ஒரு வேந்தன் முற்றுவதே அறமில் செயலாம் என்றால், முற்றுவதோடு நில்லாது அதை அழித்தும் விடுவது நனி மிகக் கொடிய அறமில் செயலாகும். அத்தகைய நனமிகக் கொடிய நாகரிகமற்ற அழிவுச் செயலை ஆசிரியர் தொல்காப்பியனார் பாடிப் பாராட்டினார், அதற்கு இலக்கணம் வகுத்தார் என்பது, அவர் பாடவந்த தமிழ் மரபிற்கு அறவே பொருந்தாது. மேலும் "களவின் ஆதந்து ஒம்பல் மேவற்று” எனக் களவாடப்பட்ட ஆக்களை மீட்டுக்