பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 இ. புலவர் கா. கோவிந்தன் குறிக்கோள் அரண் கொள்கையேயன்றித், தன் ஆற்றலைக் காட்டுவது அன்று. ஆற்றலைக் காட்ட மேற்கொள்ளும் போராயின், அது தும்பை ஆகிவிடும். ஆகவே, போரிடா மலே அரணைத் தான் பெற வழியுண்டா என்றே எண்ணிப் பார்ப்பன்; அரண் கோடல், தன் கருத்தாகும் என்பதை அறிந்தும் அரணுக்குரியவன் அரண் அடைத்து அடங்கி யிருப்பது, தன் ஆற்றலை முற்றவும் உணராமையால் என்பது உணர்ந்து அவனுக்கு அது உணர்த்தும் வழி வகைகளை மேற் கொள்வன். அடைத்திருப்பினும் அரணுள் புகுதற்கு உரியவராகிய புலவர்களை அவன்பால் போக்கித் தன் கருத்தினையும், அக்கருத்துடையோனாகி விட்ட தன் ஆற்றலையும் அவனுக்கு எடுத்துரைக்கச் செய்வன். நலங்கிள்ளி ஆவூர்க் கோட்டையை முற்றியிருந்த போது, அடைத்துக் கொண்டு அகத்தே அடங்கியிருந்த நெடுங்கிள்ளிபால் சென்ற புலவர் கோவூர்க் கிழார், அம் முற்றுகையால் அகத்தோர் படும் அல்லல்களை நிரலே எடுத்துரைத்து, அடங்கியிருப்பது அறமோ, ஆண்மையோ ஆகாது எனும் பொருள்படக் கூறிய அறவுரை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். "இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து அலமரல் யானை உருமென முழங்கவும், பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில் வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும்,