பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 இ. புலவர் கா. கோவிந்தன் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர் வாளின் தாரலன்" இவ்வாறு அரண் பெருமை கூறுவதும் அகத்தோன் செல்வமாம் என்க. அரணகத்துப்படையும் குடியும் கேடின்றி வாழ்தற்கு ஏற்பன செய்வதெல்லாம் அரண் காவலைக் கருத்தில் இருத்திச் செய்வனவாம் ஆதலின், அவை செய்யும் அவன் அதற்கு அடையாளமாக நொச்சிமலர் புனைவதும் இதன் ஒரு பகுதியே ஆகும். ஆகவே, அடுத்து வரும் சூத்திரத்தில் "அகத்தோள் வீழ்ந்த நொச்சி” எனக் கூறப்படும் துறை, அகத்தோன் செல்வம் இத்துறையின் விரிவும் விளக்கமும் ஆம் என உணர்க. ஒரு தான் மண்டிய புதுமை அரண் முற்றுகை எவ்வளவு காலம் நீளினும், நின்று தாங்குதற் கேற்ற செயல் முறைகளை ஒருபாலும், முற்றியிருக்கும் பகைப்படை முற்றுகையைக் கை விட்டுத் தானே புறங்காட்டிப் போதற்கேற்ப, அரண் மதில்களில் அரிய பொறிப் படைகளைப் பொருத்துவதை ஒருபாலும் மேற்கொள்ளும் அரணுக்குரியான் செயல்களால், புறத்தே பாடி கொண்டிருக்கும் தன் கருத்தையும், தன் நாற்படைப் பெருமையையும் அப்படை கொண்டு அரணை அழிக்கத் தான் திட்டமிட்டிருக்கும் தன் போர் முறைகளையும் அரணுக்கு உரியான் அறிந்து கொண்டான் என்பதை அரண் கோடல் கருதி வந்திருக்கும் பகையரசன் அறிந்து கொண்ட அளவில், ஒன்று, தான் கருதிவந்ததைக் கைவிட்டு வறிதே ஊர் திரும்புதல் வேண்டும்; அல்லது அரணுக் குரியான் மேற்கொள்ளும் அவ்வளவு முயற்சிகளையும்