பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 211 "பாயினார் மாயும் வகையால், பலகாப்பும் ஏயினார்; ஏய இகன்மறவர் - ஆயினார், ஒன்றியவர் அற ஊர்ப்புலத்துத் தார்தாங்கி வென்றி அமரர் விருந்து." - -பு.வெ.மாலை 87 "வினைபகை என்றிரண்டின் எச்சம், நினையுங்கால் தீயெச்சம் போலத்தெறும்” . என்றார் வள்ளுவர். பகைப்படையைப் புறநகரிலிருந்து துரத்திவிட்டதோடு போர் ஒழிந்துவிட்டதாக எண்ணி அமைதி கொள்வது ஆகாது. அதை அகழிக்கு அப்பாலும் துரத்தி அடித்து அறவே அழித்தல் வேண்டும். அதனால், புறநகரில் வெற்றி கொண்ட அரணுக்குரியான், பகைப்படையைத் துரத்திச் சென்று அகழிக் கரையில் அருஞ்சமர் ஆடி, அழித்து வெற்றிகொள்வன். அப்போரிலும் அவன் தன் வீரர் சிலரை இழப்பதும் உண்டு. புறநகர்ப் போரில் உயிரிழந்தார் போலவே, அகழிப் போரில் அழிந்தவர்களும் பாராட்டுக் குரியவராவர். அதைக் கூறுவதே "நீர்ச்செரு வீழ்ந்த பாசி" “அருமிளையொடு கிடங்கு அழியாமைச் செருமலைந்த சிறப்புரைத்தன்று" என்ற கொளுவாலும், "வளையும் வயிரும் ஒலிப்ப வாள்வீசி இளையும் கிடங்கும் சிதையத் - தளைபரிந்த நோனார் படைஇரிய நொச்சி விறல்மறவர் ஆனார் அமர்விலக்கி ஆர்ப்பு!” . என்ற மேற்கோட் செய்யுளாலும் இத்துறைக்கு விளக்கம் தரும் பு:வெ. மாலை, இத்துறைக்குப் பெயரிடுங்கால், "நீர்ச்செரு" எனப் பெயரிடுவதற்குப் பதிலாக “ஊர்ச்செரு” எனப் பெயரிட்டுப் பிழை புரிந்துளது. - அரணும் அத்துணை ஆற்றல் உடையதன்று; அரணுக்குரியானும் பெரும் படை உடையனல்லன்;