பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 இ. புலவர் கா. கோவிந்தன் வீரர்க்கு விழாச் செய்து நன்றியைத் தெரிவித்துக் கொண்டவேந்தன். அவ்விழாவால் வீரர்தம் புகழ் பெருகும் என்றாலும் அவர் வாழ்வு வளம் பெற அது துணை புரிவதாகாது. அரணைக் காத்துத் தனக்கு வாழ்வளித்த வீரர்க்கு வெறும் விழாக் கொண்டாடி விட்டதனாலேயே, அவர்க்குத் தான் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன் தீர்ந்ததாகி விடாது. அவர் உள்ளத்தில் இன்பம் குடி கொண்டது போல், அவர் இல்லத்திலும் இன்பம் குடி கொள்ளுதல் வேண்டும் என உணர்ந்தான். அதனால், அப்படை வீரர் ஒவ்வொருவரையும் போர்க் களத்தில் அவர் ஆற்றிய அருஞ் செயலின் தகுதிக்கேற்ப முன்னும் பின்னுமாக முறையே அழைத்துப் பொன்னும் பொருளும், நன்செயும் புன்செயும் வழங்கி அவரை வாழ்வித்தான். அதைக் கூறுவதே "தொகை நிலை.” - "வில்லைக் கவைஇக் கணைதாங்கு, மார்பின் மாதாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்! கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் நல்எயில் உழந்த செல்வர்த் தம்மின்! கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஒவில கறங்க எரிநிமிர்ந் தன்ன தானை நாப்பண் பெருநல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குருசிலர்த் தம்மின்! புரையோர்க்குத் தொடுத்த பொலம்பூந் தும்பை நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டிக் காழ்மண்டு எஃகமொடு கணையலைக் கலங்கிப் பிரியிணை அரிந்த நிறம் சிதை கவயத்து வானத் தன்ன வளநகர் பொற்ப நோன் குறட்டன்ன ஊன் செய் மார்பின் உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்!