பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இ. புலவர் கா. கோவிந்தன் காலமாதலானும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று. மருத நிலத்து மதிலாதல் அக நாடு புக்கு அவர் அருப்பம் வெளவி, பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று உணங்கு கலன் ஆழியில் தோன்றும் ஓர் எயில் மன்னன்' என்றதனானும் உணர்க" தொ.பொ. நச்சினார்க்கினியம், 64) என்றும் கூறியுள்ளனர். அதனால், ஆனிரை காரணமான போர் மலைநாட்டிலேயே நிகழ்வதாகும்; நாட்டெல்லை காரணமான போர் காட்டிலேயே நிகழ்வதாகும்; அரண் காரணமான போர், கழனிகளுக்கிடையிலேயே நிகழ்வ தாகும் என்பதே அவ்வுரையாசிரியர்கள் கருத்துமாம் என்பது புலனாவது காண்க. ஆக, ஆண்டெல்லாம் அவ்வாறு கூறிய அவர்கள், போர் நிகழ்தற்குக் காடும் மலையும் கழனியும் ஏற்புடைய ஆகா கடலே ஏற்புடைத்து என ஈண்டுக் கூறுவது அறவே பொருந்தாது என்க. போருக்காம் காரணப் பொருள்களான ஆனிரை, அண்டை நாட்டு எல்லை, அரண், ஆற்றல் என்ற இந்நான்கனுள், எக்காரணம் பற்றிப் போர் எழினும், அப்போர், அக்காரணத்திற்கு உரிய பொருள் நிற்கும் நிலத்திலேயே நடைபெற்று விடும். அதுவே இயல்புமாம். ஆக, இதுகாறும் கூறியவாற்றான், ஆனிரை, அண்டை நாட்டு எல்லை, அரண், ஆற்றல் எனப் போருக்காம் காரணம் # ᏗᎧaᎩ ஆயினும், அவை காரணமாக நிகழும் போர் ஒன்றே; போருக்காம் காரணப் பொருள்களாக விளங்கும் அவை நான்கும் வேறு வேறு நிலத்தன வாயினும் அவை அடிப்படையாகத் தோன்றும் போர் குறிப்பிட்ட ஒரு நிலத்தில் மட்டுமே நிகழும் என்ற பிழையுணர்வு உடையராகிப், போரிடற்கேற்ற நிலமாக இருப்பது, காடும் மலையும் கழனியும் அல்லாத களரும் மணலும் மலிந்த