பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 229 என்பான் வென்று ஒட்டினான் என்றும் பிறிதொரு செய்தி கூறுகிறது. "வெல்கொடித் துனைகாலன்ன புனைதேர்க் கோசர், தொன் மூதாலத்து அரும்பனைப் பொதியில், இன்னிசை முரசங்கடிப்பிகுத்து இரங்கத், தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர், பணியாமையின் பகைதலை வந்த, மாகெழு தானை வம்ப மோரியர், புனைதேர் நேமி உருளிய குறைத்த, இலங்கு வெள் அருவிய அறைவாய்." மற்போரில் தன்னை வெல்வார் எவரும் இலர் என்ற தன் தறுகணாண்மையினைத் தமிழ் நாட்டகத்திலும் நிலை நாட்டுதல் வேண்டும் என்ற ஆணவ உணர்வோடு தமிழகம் புகுந்த ஆரியப் பொருநன் என்ற வட நாட்டு மல்லனுக்குச் சேரர் படை முதலிகளில் ஒருவனாகிய கணையன் என்பான் இடமளித்துப் பேணிப் போற்றினானேனும், தமிழகத்தின் வடவெல்லைக்கண் அரசமைத்துக் கொண்டு, அவ்வட வெல்லையைக் காத்து நின்றவனும், ஆற்றல் மிகு மறவனும், சேரர் படையில் பணியாற்றும் பிறிதொரு படை முதலியாம் கட்டி என்பானால் அன்பு காட்டப் பெற்றவனும் ஆகிய பாணன் என்பான், அவ்வாரியப் பொருநனின் ஆணவம் கண்டு பொறாது, அவனோடு மற்போரிடத் துணிந்து, இருவரும் களம் புகுந்து போராடுங்கால், தான், அவ்வாரியப் பொருநன் தோளைத் தன் மார்போடு அணைத்து இறுகப் பிடித்துக் கொண்ட பிடியினின்றும், தன்னை விடுவித்துக் கொள்வான் வேண்டி, அவன், தன் ஆற்றல் முழுதும்காட்ட முயலவும், தான், அவனைப் பிடித்துக் கொண்ட பிடியினின்றும் ஒரு சிறிதும் தளர்த்தாமையால், ஆரியப்பொருநன் தோள்கள் இரண்டும், தன் கையிலேயே கிடக்க, அவன் உடல் மட்டும் அறுபட்டு வெளிப்பட்டு வீழ்ந்து போக, வெற்றி கொண்ட