பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 激 புலவர் கா. கோவிந்தன் கைபோய் கணை உதைப்பக் காவலன் மேல் ஓடி எய்போல் கிடந்தான் என் ஏறு." -பு.வெ. மாலை: 176, "போர் என்றதும் பூரிக்கும் தோளினன்; எளியார் மீது வலியச் சென்று தாக்கும் வன் போரை விரும்பான் எனினும், தன்னை எளியன் எனக் கொண்டு தன்னை வந்து தாக்கும் போரை விடுவானல்லன்; அவ்வாறு வந்தாரை, வெற்றி கொண்டு விரட்டி வாகை சூடுவதல்லது, அவர்க்குத் தோற்றுத் தாள் பணிவது செய்தறியான்; வெற்றியைத் தன் நாற்படை பெற்றுத் தருக எனப் போர்க்கள நிகழ்ச்சிகளை அப்படைகள்பால் ஒப்படைத்து விட்டுப், போர் ஒலி கேளா இடம் தேடிச் செல்லும் ஒளிந்துறை வாழ்வை விரும்பு வானல்லன்; மாறாக, வந்த படையை, முதற்கண், தன் நாற்படை சென்று தாங்கிச் சமர் புரிக; அது தளர்ந்த நிலையில் நாம் சென்று போரிடுவோம் எனக் காத்திராது, படையைப் பின்னர்த் தள்ளி முந்திச் சென்று, முன் சமத்து நின்று போராடுவன்!” எனக் கேட்கக் கேட்க இனிக்கும் வெற்றிப் புகழ் உடைமையால், புலவரும், பொருநரும், பாணரும், கூத்தரும் கூட்டம் கூட்டமாய் அவன் அவை நோக்கி விரையுமளவு வீரப் புகழால் வீறு கொண்டவன் சோழர் படைத் தலைவன் திருக்கிள்ளி என்பவன். ஆனால், அவனைக் காணத் துடிக்கும் உளத்தோடு அவன் அரண்மனை வாயில் முன் குவிவாரின் ஆர்வம் அவ்வளவும், அவன் அமர்ந்திருக்கும் அவை புகுந்து, அவனை ஒருமுறை நோக்கிய அக்கணமே மறைந்துவிட, ஆண்டு ஒரு கணமும் நிற்க விரும்பாது வெளியேறி விடுவர். அவர்களின் காதினிக்கும் வெற்றிப் புகழ் உடையவனாகிய அவன் மேனி, அவர்தம் கண்கள் காணக் கூசுமளவு உருக்குலைந்து கிடக்கும். போர்க்கள நிகழ்ச்சிகளை