பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 இ. புலவர் கா. கோவிந்தன் இடித்துப் பெற்ற அவலை வாயில் அடக்கிக் கொண்டு குளிர்ந்த புனலில் புகுந்து ஆடியும் மகிழ்தற்கேற்ற வளமும் வனப்பு மிக்க அவ்வேந்தர்களின் வளநாட்டு நிலை என்னாகுமோ” எனப் பரணர் புலம்பிப் பாடுமாறு, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் ஒரு களத்தில், ஒரு சேர மடிந்த நிகழ்ச்சி, இத்துறைக்குச் சாலச் சிறந்த எடுத்துக் காட்டாகும். "எனைப் பல்யானையும் அம்பொடு துளங்கி விளைக்கும் வினையின்றிப் படைஒழிந்தனவே! விறற் புகழ்மாண்ட புரவியெல்லாம் மறத்தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே! தேர்தர வந்த சான்றோரெல்லாம் தோல்கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே! விசித்து வினைமாண்ட மயிர்க்கண் முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே! சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர்! இனியே, என்னாவது கொல்தானே, கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர் பாசவல் முக்கித் தண்புனல் பாயும் யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன் தலைநாடே." -புறம்:63. தம் உடல் அழிவுற்றதேனும், தம் உள்ளம் விரும்பிய வீரப் புகழை நிலைநாட்டித் தும்பைப் போரின் பயன் கண்டார் என்னும் பொருள் தோன்ற, இத்துறைக்கு, "அழிவின்று புகழ் நிறீஇ ஒழிவின்று களத்து ஒழித்தன்று."