பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 25 என்னும் கருத்துடையராவர் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் என்பது, மேலே காட்டிய சிலப்பதிகாரத் தொடர்க்கு, "வேனிலாகிய உரிய அமைச்ச னோடே, வெவ்விய விளக்கத் தோடேயமைந்த வேந்தன் தானும் வெம்மை மிகுதலானே, தமது இயற்கை கெட்டு, முல்லை, குறி சி என்னும் இரு திணையும் முறைமை திரிந்து, தமது நல்லியல்பை இழந்து, தம்மைச் சேர்ந்தோரை நடுங்குதுயரை உறுவித்துப் பாலை என்பதோர் வடிவைக் கொள்ளும் இந்தக் காலம்” என உரை கூறுவதோடு, "பாலைக்கு நிலமின்மையும், முல்லையும் குறிஞ்சியும் பின்பு பாலையாதலும் முன்னர்க் கூறப்பட்டன” என விளக்க வுரை கூறுவதாலும் விளங்கி நிற்றல் உணர்க. இடைச்சொல் என்பதன் பெயர்க் காரணம் கூறவந்த ஆசிரிய சிவஞான சுவாமிகள், அஃது (பாலைத் திணை) எவற்றின் நடுவு நிற்பது என்று அவாவுங்கால், எண்ணு முறைமைக்கண் நடுவு நிற்பது என்றல் பொருந்தாது, முதற்பொருள் முறைபற்றி முல்லை முதலாக வைத்து எண்ணினார். உரிப்பொருள் முறைபற்றியும், புறப்பொருள் முறைபற்றியும் குறிஞ்சி முதலாக வைத்து எண்ணப்படும். அம்முக் கூற்று எண்ணு முறைமையினும் பாலைத்திணை நடுவு நிற்பது அன்றாகலின், இனி, ஏனை நால்வகை உரிப் பொருள்களினும் இடையிடையே பிரிவு நிகழ்தலின் அதுபற்றி நடுவு நிலைத்தினை என்றாரெனின் புணர்ச்சி யும் அவ்வாறு இடையிடையே நிகழ்தல் பற்றிக் குறிஞ்சியும் நடுவு நிலைத்திணை யெனல் வேண்டுமாகலானும், நடுவதாகிய நண்பகற் காலம் தனக்குக் காலமாதல் பற்றி அங்ங்ணம் கூறினாரெனின், நடுவணதாகிய இடையாமம் தனக்குக் காலமாதல் பற்றிக் குறிஞ்சியும் அவ்வாறு