பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இ. புலவர் கா. கோவிந்தன் கூறப்படுமாகலானும், புணர்தற்கும் இருத்தற்குமிடைய பிரிவு வைத்தல் பற்றிக் கூறினாரெனின், இருத்தல் இரங்கலும் அவ்வாறாகலின், அது பற்றி முல்லை நெய்தல்களும் அவ்வாறு கூறப்படுமாகலானும், உலகியற் பொருளாகிய அறம் பொருள் இன்பங்களுள் நடுவண தாகிய பொருட்குத்தான் காரணமாதல் பற்றி அங்ங்ணம் கூறினாரெனின், பரத்தையிற்பிரிவு, ஒதற்பிரிவு போல்வன ஏனையவற்றிற்கும் காரணமாகலின், பொருள் மாத்தி ரைக்கே காரணம் என்பது படாமையானும், அங்ங்னம் உரைப்பன எல்லாம் போலி என்று ஒழிக. மற்று என்னையோ காரணம் பற்றிக் குறியிட்டவாறெனின்:'நடுவண் ஐந்திணை நடுவனது ஒழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே என நிலம் பகுத் தோதுங்கால், நடுவனது எனக் குறியிட்டாராகலின், அங்ங்னம் பகுக்கப்படும் நிலங்களும் ஆகாது, அவற்றின் வேறும் ஆகாது, தனக்குரிய நிலம் நடுநிகர்த்ததாய் நிற்றல் பற்றி நடுவு நிலைத் திணையெனக் குறியிட்டாளுதலே ஆசிரியர் கருத்தென்க. அங்ங்னமாதல், "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்" என்பதனாலும் உணர்க. இங்ஙனம் குறிப்பிட்டமையின் பாலைக்கு நிலம் உண்டு என்பதும், அதனை ஏனை நிலங்களின் வேறாக வைத்துப் பகுத்தெண்ணுதல் மரபன்று என்பது உம் ஆசிரியர் கருத்தாதல் உணர்ந்து கொள்க,” எனத், தம்முடைய தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் கூறுவனவும் ஈண்டு உணரத்தக்கனவாம். நிற்க, மேலும், "கடற்றில் கலித்த முடச்சினை வெட்சி" (குறுந்: 209) என்பர், பாலையின் பண்பெல்லாம் உணர்ந்து