பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 291 யான் சிறிது கண்ணயர்ந்தாலும், அவை கெட்டுவிடக் கூடுமே என்ற கவலையுணர்வால், ஒரு கன்னிப் பெண்ணின் தாய், எவ்வாறு ஒவ்வோர் இரவையும் அஞ்சி அஞ்சிக் கழிப்பாளோ, அவ்வாறு பகை நாட்டுப் படை பாசறை கொண்டிருக்கும் இடத்திற்கு அணித்தான ஊரினர், அப்படையால் தம் ஊருக்கு வர இருக்கும் கேடுகளை எண்ணி எண்ணி அஞ்சி உறக்கம் மறக்கும் கொடுமையைப் புலவர்கள் நன்கு எடுத்துக் கூறி யுள்ளார்கள். "போர்எனில் புகலும் புனைகழல் மறவர், வலமுறை வருதலும் உண்டென்று அலமந்து துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே! -pi 31 "ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப் பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” -குறுந்: 292. "கொன்முனை இரவூர் போலச் - சிலவாகுக நீ துஞ்சும் நாளே." - -குறுந் 91.