பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 297 வாழ்வை நெடுங்கிள்ளி பெற்றிருப்பது பொறாது, பெரும் படையொடு சென்று உறையூரை வளைத்துக் கொண்டான் நலங்கிள்ளி, தன்னைப் போல் சோழர் குடியில் வந்தவன் தானே நலங்கிள்ளி; உறையூரை அவன்தான் உடைமை யாக்கிக் கொள்ளட்டுமே என எண்ணி உறையூர் விட்டு வெளியேறாது, உறையூர் அரண் வாயிலை அடைத்துக் கொண்டு உள்ளே அடங்கி விட்டான் நெடுங்கிள்ளி. இந்நிலை நீளின், கரிகாற் பெருவளத்தான் அரிதின் முயன்று, அரணும் பெருங்கோயிலும், குடிமக்கள் வாழ்வதற்காம் எழுநிலை மாடங்களும் இடம் பெறக் கண்ட உறந்தைப் பெருநகர் உருக்குலைந்து போய்விடும்; அந்நிலையை எண்ணி ஏங்கினார் ஒரு புலவர்; கோவூர்க்கிழார் என்ற அப்புலவர் எண்ணி ஏங்குவதோடு அமைதி கொண்டு விடாது, அவ்வழிவு நிகழாவண்ணம் காக்கவும் கருதினார்; முற்றி வளைத்துக் கொண்டு அரண்புறத்தே பாசறை கொண்டிருக்கும் நலங்கிள்ளி பால் சென்றார்; ஆனால் அவனோ உறையூர் அரியணையில் அமரப்போகும் அந்நிலையை ஆர்வத்தோடு எதிர்நோக்கி, அது பெற, எத்துணை பெரிய போர் மேற்கொள்ளவும் துணிந்திருந்தான்; அவன் மனக் குறிப்பு அதுவாதல் அறிந்த புலவர் போரைக் கைவிடுக என வெளிப்படக் கூற விரும்பாது, அதைக் குறிப்பு மொழிகளால் கூறத் துணிந்து, "நலங்கிள்ளி, உன்னால் வளைக்கப்பட்டு, இவ்வுறையூர் அரணகத்தே அடங்கியிருப்பானை, இப்போழ்துதான் கண்டு வந்தேன். அவன் கழுத்தில், ஆத்திப்பூ மாலை மணங்கமழக் கண்டு களிப்புற்றேன்; அரண் புறத்தே வந்து, அரணை வளைத்துக் கொண்டிருக்கும் பெரும் படைக்கு உரியவனாகிய உன்னைக் காண்கின்ற நான், உன் கழுத்தில்,