பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 299 "இரும்பனை வெண்தொடு மலைந்தோன் அல்லன்: கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே: ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே, இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் குடிப் பொருள் அன்று நும்செய்தி, கொடித்தேர் தும்மோ ரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் இகலே. -புறம் 45. ஒருவன் நல்லவனாக வாழத் துணை புரிவன இரண்டு; ஒன்று அச்சம், இரண்டு அன்பு, இவை ஒவ்வொன்றும் இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றும்; இதைச் செய்தால் பழி வருமே எனத் தீவன செய்யும் நிலையிலும், இதைச் செய்யாது விட்டால் பழி வருமே என நல்லன செய்யா நிலையிலுமாக அச்சம் தோன்றும் நிலைக்களம் இரண்டாம். அது போலவே, இதைச் செய்தால் இன்பம் பெறலாமே என நல்லன. செய்யும் நிலையிலும், இதைச் செய்யாதிருந்தால் இன்பம் பெறலாமே எனத் தீயன செய்யா நிலையிலுமாக அன்பு தோன்றும் நிலக்களமும் இரண்டாம். . இவ்வாறு ஒருவனை நல்லவனாக்கும் நிலையில், அச்சம் அன்பு ஆகிய இரண்டுமே துணை புரியும் என்றாலும் அச்சத் துணையினும் அன்புத் துணையே சாலச் சிறந்தது. நல்லனயால், அச்சங் காரணமாகப் பிறக்கும் பற்றினும், அன்பு காரணமாகப் பிறக்கும் பற்று ஆற்றல் வாய்ந்ததாகும். ஆனால், ஒருவனை நல்ல வனாக்கும் பணியில், அன்பினும், அச்சமே பரவிச் செயல்படுவதாகும். அன்புணர்வு காரணமாக நல்லவ