பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி ஒ 29 ஆடு, மாடு, மான் போலும் உயிரினங்களும் ஆங்கே வாழ்ந்திருந்தன. மழையிலும் வெய்யிலிலும் கிடந்து வருந்தாதவாறு, மக்களுக்கு இருக்க இடம் அளித்து உதவும் மலைக் குகைகளும் மரப் பொத்துகளும் போலும் இயற்கையின் இயன்ற வாழிடங்களும் ஆண்டே இடம் பெற்றிருந்தன. - இவ்வாறு தமக்கு வேண்டும் உணவுப் பொருள்கள், தம் முயற்சி ஒரு சிறிதும் இன்றியே, எங்கும் எப்பொழுதும் கிடைத்தமையால், நாளைக்கு வேண்டும் என ஈட்டி வைக்க வேண்டிய இன்றியமையாமை, அம்மலை வாழ் மக்கட்கு உண்டாகவில்லை. ஆனால் அந்நிலை நெடிது நாள் நிற்கவில்லை. நாள் ஆக ஆக, மக்கள் தொகை பெருகிக் கொண்டே வந்தது. ஆனால், அம்மக்கள் வளர்ச்சிக்கு ஏற்ப, உணவுப் பொருள்கள் பெருகவில்லை, மக்கள் தொகை நாள்தோறும் பெருகிக் கொண்டே வந்தமையாலும், மக்கள் பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருள்கள் பெருகாமை யோடு, அம்மக்கள் அவற்றைத் தொடர்ந்து தின்று கொண்டே வந்தமையால் இவை நாளடைவில் நனி மிகக் குறைந்து விட்டமையாலும், அம்மலை வாழ் மக்கட்கு உணவுக் குறைபாடு உண்டாயிற்று. ஆகவே, அம் மக்களுள் ஒரு சிலர் தாம் வாழும் அக்குறிஞ்சி நிலத்தைக் கைவிட்டு நீங்கி, அந்நிலத்தைச் சார்ந்துள்ள குறுமலைக் காட்டு நிலமாம் LTನಾ೯ು நிலத்துள் சென்று தங்குவராயினர். ஆனால் அப்பாலை நிலம், குறிஞ்சி போல் வளம்வாய்க்கப் பெற்றது அன்று. ஆகவே, அம்மக்கள் நிலைத்த குடியினராய் ஆண்டே வாழ்தல் இயலாது போயிற்று. அதனால், அவர்கள் அப்பாலையையும் கடந்து, அப்பாலையை அடுத்திருந்ததான மலை யொழிந்து காடு கொண்ட