பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. இ. புலவர் கா. கோவிந்தன் கடுங்கண் மறவன் கழல்புனைந்தான் காலை நெடுங்கடைய நேரார் நிரை." -பு.வெ. மாலை:- 2 இதனால், அம்மறவனிடத்தில் கைப்பொருள் கரைந்து விட்டது; கள் விலையாகத் தருவதற்காம் சிறு பொருளும் அவன்பால் இல்லை. அவன் வறுமைநிலையை அவ்வூர்க் கள் விலையாட்டியும் உணர்ந்து கொண்டாள்; அதனால் அவனுக்குக் கள் அளிக்க மறுத்து விட்டாள் அவள். அதனால் அவனுக்குக் கள் கிடைப்பதும் அரிதாகி விட்டது. அந்நிலை அவனுக்கு மாறாச்சினம் தந்தது. அதனால் அண்டை நாடுகளுள் புகுந்து, அந்நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொணரத் துணிந்தான். அதற்காகவே படையேந்திப் புறப்பட்டான் என்பது பெறப் படுகிறது. படவே, பற்றாமையால் வந்த பசிக்கொடுமையே, பகைவர் நாட்டுப் பசு நிரைகளைப் பற்றிக் கொணருமாறு அவனைத் துரண்டிற்று எனப் பட்டு நிரைகோடற்காம் பண்டைக் காரணத்தின் பிறழாது, அதற்கு அரண் செய்து நிற்பதைக் காண்க. இனிக், "கள்விலையாட்டி மறுப்பப் பொறா மறவன் கைவில் ஏந்திப்புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும் போலும்" என வரும் சிலப்பதிகாரத் தொடர்ப் பொருளும் (சிலம்பு: வேட்டுவவரி, புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுட் கருத்தோடு ஒத்து நின்று நிரைகோடற்காம் காரணம் குறித்து மேலே கூறிய கருத்தினை அரண் செய்து நிற்பது அறிக. இனி, மன்னுறு தொழிற்கு உதாரணமாக வந்துள்ள வெண்பாமாலைச் செய்யுள் அரசன் ஒருவன், தன் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன் வில்லைச் செப்ப னிடவும், அம்புகளைத் தேர்ந்தெடுக்கவும் கண்டான்.