பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இ. புலவர் கா. கோவிந்தன் உரையில், "கடனறிந்தோர் என்றதனான்வெருகினை விடை என்றலும் போல்வன பலவும் கொள்க’ என்பதற்கு ஏற்ப “வெருக்குவிடை அன்னவெருள்நோக்கு’ (புறம்: 324) என்புழி வெருக்கு எனப்படும் காட்டுப் பூனையின் ஆணும் விடை என்ற பெயரால் வழங்கப்பட்டுளது ஆதலாலும், விடை என்னும் பெயர் ஆட்டின் ஆணையே குறிக்கும் என்பது பொருந்தாது. மேலும், "பெற்றமும் எருமையும், மரையும் ஆவே” (மரபு:60) என மாட்டின் பெண் ஆ என வழங்கப் பெறும் என்ற ஆசிரியர் தொல்காப்பியனார், "ஆ தந்து ஓம்பல்” என்றே கூறியுள்ளமையாலும், "பன்றி, புல்வாய் உழையே கவரி என்றிவை நான்கும் ஏறு எனற்கு உரிய', 'எருமையும், மரையும், பெற்றமும் அன்ன” (மரபு.388, 39) என்ற சூத்திரங்களால், மாட்டின் ஆணைக் குறிக்கும் பெயராம் என உறுதி செய்யப்பட்ட "ஏறு” என்ற பெயரே, வெட்சியாரால் கவரப்பட்ட நிரையினைக் குறிப்பிடும் "ஏறுடைப் பெருநிரை பெயர்தர (புறம், 259) என்ற புறநானூற்றுத் தொடரில் இடம் பெற்றுள்ளமையாலும் நிரை கவர்தலாவது, மாட்டினத்தின் நிரை கவர்தலைக் குறிக்குமே யல்லது, ஆட்டினத்தின் நிரை கவர்தலைக் குறிக்காது என்பது உறுதியாம். அஃது உறுதியாகவே மன்னுறு நொழிலாம் நிரை கவர்தலுக்கு எடுத்துக் காட்டாக வந்துள்ள பு:வெ.மா. செய்யுட்கண் “விடை ஆயம் கொள்க என்றான் வேந்து" என்புழி வந்திருக்கும் "விடை என்ற சொல்லால் குறிக்கப் பெறுவது மாட்டினத்து ஆணாம் ஆனேறே ஆகும். மேலும் "உதள நெடுந்தாம்பு” என்ற பெரும்பாணாற்றுப் படைத் தொடரில் (15) வந்திருக்கும் உதள் என்ற சொல்லிற்கு, ஆட்டின் ஆணைக் குறிக்கும் பெயர்களுள் ஒன்றாக, மிகையால் கொள்ளப் பட்ட கிடாய் எனப் பொருள் கூறிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், அவ்வரிக்கு ஏழு வரிகளே முற்பட,