பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 5 களவொழுக்கமே, பலர் அறியச் செல்லும் தகுதி வாய்ந்த தன்று என்றாகி, ஆகவே, வெட்சியார் ஆரவாரம் செய்து கொண்டே சென்றனர் என உரைக்கும் வெட்சி அரவம் எனும் துறை வெட்சித் திணைக்குப் பொருந்தி மாறின்மையினை உணர்த்தும் என்க. ஆகவே வெட்சி அரவம் என்ற துறை. கரந்தை அரவம், வஞ்சி அரவம் எனப்பிறதிணைகட்கு அரவம் கூறப் பெறுவதை நோக்கிப் பிற்காலத்தே மேற்கொண்டதேயல்லது. இன்றியமையாது வேண்டப்படுவதோ, இயல்பாக அமைந்ததோ அன்று என அறிக. வெட்சியொழுக்கம் தோன்றிய காலத்தில், அதில் இடம் பெறாத வெட்சி அரவம், பின்னர் இடம் பெற்றது எவ்வாறு பசித்த பாலை நிலத்து மறவர், பக்கத்து நிலத்தவராகிய ஆயர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து செல்வதே வெட்சியாம் என்ற தொடக்க நிலை கெட்டு, வேந்தன் ஒருவன் வேற்று நாட்டவர் மீது போர் தொடுக்கும் முதல் நிகழ்ச்சியாம் நிலை பெற்ற அந்நிலையிலேயே, வெட்சித் திணைத்துறைகளுள் ஒன்றாக வெட்சி அரவமும் இடம் பெற்றிருத்தல் வேண்டும். மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தர்க்கு மறத் துறையிலும் அறமே நிகழ்தல் வேண்டும் என்ப. வெட்சியார் தம் ஆனிரைகளைத் தாம் அறியா நிலையில், தாம் ஏமாந்திருக்கும் நிலை நோக்கி வந்து கவர்ந்து சென்றமை கண்டு, 'வந்தவர் யாம் அறிய வந்திருப்பின், யாமும் படையோடு காத்திருக்குங்கால் வந்திருப்பின், அவரால் எம் ஆனிரைகளைக் கைப்பற்றிக் கோடல் ஒண்னுமோ? மாறாக வந்தவர் அனைவரும் மடிந்து மண்ணாகிப் போயிருப்பர் அல்லரோ? யாம் ஏமாந்திருக்கும் போது, இரவிற்போந்துக் களவாடியன்றோ