பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 இ. புலவர் கா. கோவிந்தன் சென்றனர்! இதுவும் ஒரு ஆண்மையோ?” எனக் கரந்தையார் பழித்துரைப்பது கேட்டு, எளியார் மீதும், ஏமாந்திருப்பார் மீதும் போர் தொடுத்தல் ஆண்மையோ அறமோ ஆகாது; அது, தம் பேராண்மைக்கோர் இழுக்காம் என உணர்ந்த வெட்சியார், அந்நிலையில், ஆனிரைக் குரியார் அறியாவாறு சென்று களவாடிக் கொணர்தல் இனிக் கூடாது, அவர் அறியவே சென்று கவர்ந்து வருதல் வேண்டும், அதுவே ஆண்மையும் அறமுமாம் எனக் கொண்டு, ஆனிரை கவர்ந்து வரச் செல்லும் தம் செயலை, அவ்வானிரைக்குரிய ஆயர் அறிந்து கொள்ளுமாறு போர் முரசு முழக்கிப் பேராரவாரம் பண்ணுவாராயினர். ஆனிரைகளைக் காத்துக் கிடக்கும் அந்நாட்டு வீரர்களே யல்லாமல், அந்நாட்டுப் பறவைகளும், பகைவர் நிரை கவர வருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள வல்ல நிரைகோட் பறையாம் துடியினை முழக்கிக் கொண்டே செல்லத் தலைப்பட்டனர். . நெடிபடு கானத்து நீள் வேல் மறவர் அடிபடுத்து ஆரதர் செல்வான் - துடிபடுத்து வெட்சிமலைய, விரவார் மனநிரைக் கட்சியுள் காரி கலுழ்ம்..” -பு. வெ. மாலை 3 என்ற புறப் பொருள் வெண்பா மாலைச் செய்யுளில், ஆனிரை கருதிச் செல்லும் வெட்சியார், செல்வதன் முன் நிகழ்வதான வெட்சி மலர் அணியும் விழாவில், ஆனிரை உறையும் காட்டிடத்ததான காரி எனும் பறவையும் கேட்டுக் கலங்குதற்குக் காரணமானதுடிப்பறை கொட்டப் படுவது கூறப்பட்டிருப்பதையும், "பிள்ளை உள்புகுந்து அழித்தது ஆதலால் எள்ளன்மின் நிரை இன்று நீர்" - சிந்தாமணி. 420