பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ஆ புலவர் கா. கோவிந்தன் அந்நிலை கழிந்து விட்டது. பசியான் வருந்திய பாலை நிலத்து மறவர், தம் அண்டையில் வாழ்ந்த ஆயர்தம் ஆனிரைகளைக் களவாடிக் கொன்று தின்று வாழ்ந்த கொடிய ஒழுக்கம், நாள் ஆக ஆக, அருள்நிறை ஒழுக்கமாக மாறி அமைவதாயிற்று. கைப்பற்றும் ஆனிரைகளை யெல்லாம் கொன்று கொன்று தின்றே தீர்த்தமையால் மீண்டும் உணவுக் குறைபாடு உண்டாகும்தோறும், பகைவர் நாட்டுள் புகுந்து போரிட்டு வர வேண்டிய நிலையுற்ற வராய் வெட்சியார், அது தொல்லை தருசெயலாம் என உணர்ந்தமையாலும் கொணர்ந்த ஆனிரைகளைக் கொன்று தின்றுவிடாது, அவற்றிற்குப் புல்லும் புனலும் அளித்துப் புரப்பின், அவை ஒன்று பலவாகியும் பால் முதலாயின அளித்தும் பயன்தரும் என அறிந்தமையாலும், கைப்பற்றிய ஆனிரைகளைக் கொன்று கொடுமை செய்யாமையோடு ஆங்கு, அவற்றிற்குப் புலி முதலாம் கொடுவிலங்குகளால் கேடுறாவாறு நின்று காத்தும், புல்லும் புனலும் அளித்தும் போற்றிக் கொணர்ந்து பேணி வளர்ப்பாராயினர். இந்நிலையிலேயே "நோய் இன்று உய்த்தல்” எனத் தொல்காப்பியனாராலும், “அருஞ்சுரத்தும் அகன் கானத்தும் வருந்தாமல் நிரை உய்த்தன்று” என வெண்பாமாலையாராலும் போற்றப்படும் “சுரத்து உய்த்தல்" என்ற துறை வெட்சித் திணைக்கண் இடம் பெறலாயிற்று. . - வெட்சியாவது, பசித்தவர் பக்கத்தில் உள்ளார் பொருளைப் பறித்து உண்பது என்ற நிலை இருந்த போதினும், அந்நிலை கெட்டுப், பகை நாட்டின் மீது படையெடுத்துப் போகும் மன்னனின் முதல் நிகழ்ச்சியாம் நிலைபெற்ற போதே, கவர்ந்து கொண்ட ஆனிரைகளைக்