பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இ. புலவர் கா. கோவிந்தன் "கொடையும்" வெட்சித் திணைத் துறைகளிடையே இடம் பெற்றன. அவ்வாறு அம்மறவர் அளித்த கொடைப் பொருளாம் ஆனிரை பெற்றாருள், பகைவர்க்குரிய ஆனிரை நிற்கும் இடம், அவற்றின் அளவு, அவற்றைக் காத்து நிற்கும் காவலர் அளவு ஆகியவற்றை அறிந்து வந்து உரைத்த ஒற்றர், நற்சொல் கேட்டும், நன்னிமித்தம் கண்டும், ஊக்கம் ஊட்டியவர் ஆகிய இருவரும் சிறப்பாகப் பாராட்டிற்கு உரியராவர்; அவர்களுக்கு வழங்குவது, த உரிமையை அடிப்படையாகக் கொண்டதாயின் "பாதிட்'டின் கீழ் அடங்கும்; அருளை அடிப்படையாகக் கொண்டதாயின் "கொடை"க் கீழ் அடங்கும் எனக் கொண் டமையால் தொல்காப்பியனார் அவ்விரு திகழ்ச்சிகளையும் தனியே பிரித்து வேறு கூறினாரல்லர்; ஆனால், வெண்பாமாலையாரோ, அவற்றைப் "புலன் அறி சிறப்பு”, “பிள்ளை வழக்கு” எனத் தனித் தனித் துறைகளாக்கிப் பாராட்டிச் சென்றுள்ளார். கேட்ட தம் வீரர்க்கு ஊக்கமும் உரனும், பகை நாட்டவர்க்கு அச்சமும் ஆற்றாமையும் தருவது நிரை கோட்டறையாம் துடியின் ஒலியேயாம். அவ்வொலி தானும், இதை ஒலிப்போன் ஆற்றல், ஆற்றல் இன்மை களுக்கு நிற்ப, நிறை பயனும் குறை பயனும் அளிக்கு மாதலின், இவ்வொலித்தற் கென்றே ஒரு சிலரை வரைந்து கொள்ளுதலும், புலன் அறிந்து உரைத்தார்க்கும், புல் நிமித்தம் பார்த்து உரைத்தார்க்கும் பெரும் பொருள் அளித்துப் பேணல் போல், அவர்க்கும் பொருள் அளித்துப் போற்றலும் பாராட்டலும் பாலை நிலத்தாரிடையே பண்டே நிலவின. ஆகவே, அதைக் கூறும் "துடிநிலையும்" வெட்சிக் கண் இடம் பெற விதி வகுத்துள்ளார் வெண்பா